உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா நகரில் உள்ள ஒரு பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023ல் போர் துவங்கியது. காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, உள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களில் 61,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8v1lkfgh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், காசா நகரில் உள்ள ஒரு பத்திரிகையாளர் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பிரபல நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டனர். இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதை உறுதிப்படுத்தியது.அல்-ஷெரிப் ஒரு ஹமாஸ் செயல்பாட்டாளர் என்றும், அவர் ஒரு பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டு ராக்கெட் தாக்குதல்களுக்குப் பொறுப்பான பயங்கரவாதக் குழுவை வழிநடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது.'ஹமாஸ் பயங்கரவாத அமைப்பில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராக அனஸ் அல் ஷெரீப் பணியாற்றினார், மேலும் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அவர் பொறுப்பேற்றார்' என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sridhar
ஆக 11, 2025 20:29

ஹமாஸ் காரன் பல ரூபங்களில் வருவான். பொதுமக்களோடு மக்களாக கலந்து இருப்பான். சிலநேரம் டாக்டர் வேசம் மற்றபல நேரங்களில் பத்திரிகையாளன் வேசம் இப்படி பல ரூபங்களில் வருவதால்தானே இவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடிகிறது? அப்பாவி பொதுமக்கள் சாவு குழைந்தைகள் சாவுன்னு உலகம் பூரா பரப்பி அனுதாபம் தேடுவானுங்க. ஆனா, அந்த அப்பாவிகளை கேடயமா பயன்படுத்தி அவங்க மத்தியில மறைஞ்சு நின்னு நாசகார வேலை செஞ்சது யாருக்கு தெரியப்போவுதுனு நினைப்பாங்க. அப்பாவி இல்லாட்டாலும் போரோட சம்பந்தம் இல்லாத மக்கள் இவ்வளவு பேரு செத்திருக்காங்களே கொஞ்சமேனும் மனுசத்தன்மை இருந்திருந்தா ஐயா சாமி வேணாம் போதும் சரணடையரோம்னு வேலு நாயக்கன் மாதிரி சொல்லியிருக்கணுமா வேண்டாமா? இன்று வரை ஒரு பாதிப்பும் இல்லாம பளபளன்னு முகமூடியோட தெம்பா அலைஞ்சிட்டு இருக்கானுங்க. பாக்கப்போனா, அத்துணை சாவையும் மூலதனமாக்கி அதை வைத்து சம்பாதிச்சிட்டுருக்காங்க நல்ல வேளை இஸ்ரேல் காரன் விடுறதா இல்லை. இந்தியா மாதிரி வழவழாவும் இல்லை. முடிவு வராட்டலும் சும்மா போட்டு தள்ளிட்டே இருக்காங்க.


அன்பு
ஆக 11, 2025 21:29

பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் அத்தனை பேரையும் விடுவித்து அமைதிக்கு வழி இருக்க ஹமாஸ் தமாஷ் செய்வது ஏன்? அவர்கள் தான் ஆரம்பித்து வைத்தார்கள்.


தாமரை மலர்கிறது
ஆக 11, 2025 18:57

தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தி, ஆதரவளித்து வரும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் பாராட்டத்தக்கது. இதனால் தீவிரவாதம் குறையும்.


Rathna
ஆக 11, 2025 18:36

அல் ஜசீரா ஒரு தீவிரவாத டிவி. இந்தியா பாக்கிஸ்தான் போரில் இந்தியாவை தோற்று போனதாக டிவி மற்றும் இணையத்தில் பொய் செய்தி பரப்பிய ஜிஹாதி கத்தார் அரசாங்கத்தின் டிவி. அல் ஜசீரா மற்றும் ஹமாஸ், எமலோகம் அனுப்புவதில் இஸ்ரேல் முன்னோடி.


Prof.Dr.Y.Shanthoshraja.PT
ஆக 11, 2025 16:09

போர் என்பது இருபக்கமும் தீட்டப்பட்ட கூர்மையான ஆயுதம். எனினும் அப்பாவி மக்களும், குழந்தைகளும் மற்றும் போர் பகுதியில் செயல்படும் அநேகரும் பாதிக்கப்படுகின்றனர். போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.


Vijay D Ratnam
ஆக 11, 2025 15:48

மாட்டை தொழுவத்தில் கட்டிவைத்து அடித்தால்தான் அடி சிந்தாமல் சிதறாமல் விழும் என்று ஆறுச்சாமி சொன்னது போல தெருநாய் முட்டுச்சந்துல உட்டு அடிப்பது போல இஸ்ரேரல்காரன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை, அதன் ஆதரவாளர்களை வச்சி செய்துகொண்டு இருக்கிறான். ஆரம்பத்துல உலக நாடுகள் மத்தியஸ்தம் செய்றேன்னு ஷோ காட்டிகினு இருந்தாய்ங்க. இப்போ அவிங்க பிஸியாகிட்டாய்ங்க. ரஷ்யா உக்ரேன் பிரச்னை, இந்தியா பாகிஸ்தானை போட்டு பொளந்தது, டாலருக்கு சாவுமணி அடிக்கப்போகும் தற்குறி ட்ரம்பின் வரி பயங்கரவாதம், பிரிக்ஸ் புது கரன்சி கொண்டு வரப்போவது என்று ஆயிரம் பிரச்சினை இருக்குது. இதுல எவன் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை பார்க்கப்போறான்.


ரங்ஸ்
ஆக 11, 2025 14:50

தீவிரவாதிகள் இருந்தால் முழுவதும் அழிக்கப்பட வேண்டும்.


ரங்ஸ்
ஆக 11, 2025 14:30

இன்னமும் சில இஸ்ரேலியர்கள் பிணைக்கைதிகளாக தங்களுக்கு தாங்களே சவக் குழிகள் தோண்டும் நிலை. கொடுமை. அதனால் தான் ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் முற்றிலும் ஓழித்துக்கட்டுகிறது.


Ramesh Sargam
ஆக 11, 2025 12:38

இக்கட்டான நிலையிலும் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகை நண்பர்களின் உயிரிழப்பு மிக மிக வருந்தத்தக்கது. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு தரப்படவேண்டும்.


visu
ஆக 11, 2025 12:30

அல் ஜஸீரா டிவி பாருங்க ஹமாஸ் நேர்மையானவர்கள் இஸ்ரேல் மூர்கர்கள் என்று ஹமாஸ் புகழ் பாடுவாங்க


ராமகிருஷ்ணன்
ஆக 11, 2025 12:24

நல்லதுதான் சிறப்பு.