உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர். ஈரானில் அணு ஆயுத மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈரானும் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானில் ராணுவ தொழிற்சாலைகள் அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறியதாவது; அனைத்து ஈரான் குடிமக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது. இந்த பகுதியில் வசித்து வருவது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 23:27

போர் இன்னும் ரெண்டு நாட்கள் நீடித்தால், பெட்ரோல் விலை முன்னூறு ரூபாயாக ஏறிவிடும். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுக்க, உலக நாடுகள் கொடுக்கும் சிறிய விலை தான் இது. மிகப்பெரிய விலையை இஸ்ரேல் கொடுக்கிறது.


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 19:44

ஈரானிய இராணுவத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் விமானத்தில் தப்பி ஓடுகிறார்கள். சவுதியும் அவர்களை விருந்தினர் என்று தங்க அனுமதி கொடுத்து இருக்கிறது.


Pandi Muni
ஜூன் 15, 2025 19:16

அறிவிப்பெல்லாம் எதுக்கு? மூர்க்க கும்பல போட்டு தள்ள வேண்டியதுதானே


Nada Rajan
ஜூன் 15, 2025 18:14

ஈரான் நிலமை பாவம். இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் அணு ஆயுத தாக்குதல் நடத்துகிறது.


முக்கிய வீடியோ