உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெய்ர் அல் - பலாஹ்: காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 90 பேர் பலியாகி உள்ளனர்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 48 மணிநேரத்தில் மட்டும், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 90 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 15 பேர் ஒரே இரவில் கொல்லப்பட்டதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Pandi Muni
ஏப் 19, 2025 20:35

நல்ல செய்தி. உலகின் கடைசி மூர்க்கன் அழியும் வரை தொடரட்டும்


अप्पावी
ஏப் 19, 2025 20:03

இன்னிய தேதியில் பிணைக்கைதிகளை அவுத்து உட்டுட்டு ஓடறதுதான் ஹமாசுக்கு நல்லது. உங்களுக்கும் காலம் கனியும். பொறுத்திருங்கள்.


மீனவ நண்பன்
ஏப் 19, 2025 19:10

பெண்கள், குழந்தைகள் என 90 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழக்கமா பெண்கள் குழந்தைகள் என்று சொல்வது வழக்கமான வாசகம்....


Rajathi Rajan
ஏப் 19, 2025 18:38

இஸ்ரேலின் அழிவு காலம் மிக வேகமா நெருங்கி ஒண்டு இருக்கிறது,,, பெண்கள், குழந்தைகளை கூட கொல்லும் அரக்கன் இசுரேல் மிக கேவலமாக அழிந்து போய் விடும்,


jss
ஏப் 19, 2025 19:42

அப்போது அக்டொபர் ,23 ல் நடந்த கொலைகளுக்கு காரணகர்த்தா யார். எப்படி யெர்லாம் அக்கிரம்ம. செயதார்கள் என்று தெரியுமா


Pandi Muni
ஏப் 19, 2025 20:34

அரக்கர்களைத்தானேடா இஸ்ரேல் கொன்னுக்கிட்டிருக்கான் அவனை பொய் அரக்கனுங்கரியே மூர்க்கா


பேசும் தமிழன்
ஏப் 19, 2025 20:49

ஏம்பா... ராஜாதி ராஜா.....சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல்... சும்மா இருந்த இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி.... பொது மக்களை கொன்ற போது.... நீங்கள் எங்கே போய் இருந்தீர்கள்.... அப்போது உங்களுக்கு வலிக்கவில்லை..... இப்போது மட்டும் வலிக்கிறது..... இருக்கும் நாட்டுக்கு விசுவாசமா இரு !!!.... மனிதனுக்கு மதம் எனும் மதம் பிடிக்கக் கூடாது.


சமீபத்திய செய்தி