வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தூங்கியவனை நாம் அடித்தபோது இனித்ததே அவன் திருப்பி அடிக்கும்போது ரசிக்கலாமே.
ஹமாஸ் தீவிரவாத தலைவர்கள் எல்லோருமே பாதுகாப்பாக தோஹாவில்தான் இருக்கிறார்கள். அவர்களை கத்தார் அரசு வெளியேற்றாதவரை அவர்களுக்கு பிரச்சனைதான்.
ஜெருசலேம்: கத்தார் தலைநகரில் ஹமாஸ் அமைப்பினரின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.காசாவில், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் விமானப்படை மூலமும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=86ipue5a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சூழ்நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இதனால், அந்நகரில், வானை முட்டும் அளவுக்கு புகை எழும்பியது. தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். தாக்குதலுக்கு மத்தியில் தோஹாவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தாலும், எந்த வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதல் கோழைத்தனமானது என கண்டனம் தெரிவித்துள்ள கத்தார் அமைப்பினர், இது சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறிய செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தூங்கியவனை நாம் அடித்தபோது இனித்ததே அவன் திருப்பி அடிக்கும்போது ரசிக்கலாமே.
ஹமாஸ் தீவிரவாத தலைவர்கள் எல்லோருமே பாதுகாப்பாக தோஹாவில்தான் இருக்கிறார்கள். அவர்களை கத்தார் அரசு வெளியேற்றாதவரை அவர்களுக்கு பிரச்சனைதான்.