உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு

காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர்கள் 38 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று (ஜூன் 16) காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. உதவி மையம் அருகே குவிந்து இருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ஹமாஸ் படையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மறுபுறம், இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரையில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Money Money
ஜூன் 16, 2025 21:45

ஹமாஸ் தீவிரவாதிகளை அந்த மக்களே கொல்ல வேண்டும். தீவிரவாதிகள் மக்கள் போர்வையில் ஒளிந்து இருக்கிறார்கள்.


Ramesh Sargam
ஜூன் 16, 2025 21:03

அந்த உக்ரைன்-ரஷ்யா போரே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் இந்த இஸ்ரேல்-ஈரான் இடையே கடும் போர். போர்வெறி பிடித்த நாடுகள் ஒரு பக்கம். போர் செய்ய தூண்டும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரு பக்கம்.


Sudha
ஜூன் 16, 2025 20:04

இன்னொரு ஹிட்லர் உருவாக வழி வகுக்கிறார்கள். இன்னொரு 9/11 தாக்குதல் நடக்க தயாராகிறார்கள். வாழுவாழ விடு என்பது இரண்டு மதங்களுக்குமே பொருந்தாது போல


Kumar Kumzi
ஜூன் 16, 2025 21:51

மூர்க்கம் யாரையும் வாழ விடாது அழிவை நோக்கி செல்கிறது


அப்பாவி
ஜூன் 16, 2025 19:48

மிகவும் கண்டிக்க வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 16, 2025 19:02

யாசகம் பெரும் எளியோரை கொல்வது தவறு. ஆயினும் ஐநா உதவியை ஹமாஸ் வழிப்பறி செய்து அதிக விலைக்கு விற்பதாக கடும் குற்றச்சாட்டு உள்ளது. அதை தடுக்க அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று காஸா மக்களுக்கு நேரடியாக உணவுப்பொருள் வழங்கும் ஒரு உதவி மையத்தை நடத்தி வருகிறது. தங்களின் வருமானம் தடைப்படுவதால் ஹமாஸ் நபர்கள் வேண்டுமென்றே அங்கு பிரச்சினை செய்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. தொண்டு நிறுவனத்தின் உதவி வேண்டாம் என்றால் அங்கு யாரும் போகாமல் இருக்கலாமே? ஏன் அங்கு கூட்டம் அலைமோதுகிறது? இது யோசிக்க வேண்டிய விஷயம். கொல்லப்படுவார்கள் எளிய மக்களா அல்லது சமூக விரோதிகளா என்பது தெரியவில்லை. இதில் இரண்டு பக்க விளக்கமும் இல்லாமல் முடிவெடுக்க முடியாது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 16, 2025 18:38

செய்த தவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும்


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 18:24

அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கட்டும்., அப்பாவி பொது மக்களின் மீது, ஆயுதம் இல்லாத, உணவிற்காக பிச்சை பாத்திரம் ஏந்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது எல்லாம் அநியாயம், அக்கிரமத்தின் உச்சம். இஸ்ரேல் நாட்டின் யோக்கியதை எல்லா உலக நாடுகளும் கவனிக்க வேண்டும். போர் என்ற பெயரில் இனப்படுகொலை செய்வதை எல்லாம் ஐநா மனித உரிமைகள் ஆணையம் வேடிக்கை பார்ப்பது அசிங்கம். அவமானம்.


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 18:14

போர் என்ற பெயரில் இஸ்ரேல், காசா மக்களை இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது. அதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கிறது. சாதாரண மனிதர்களும், தீவிரவாதிகளாக மாற இதுபோன்ற அடக்குமுறைகளும், இனப்படுகொலையும் தான் காரணம். இப்படி செய்தால் தங்களை தற்காத்து கொள்ள மக்கள் ஆயுதம் ஏந்த தானே செய்வார்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கி விட்டு பிறகு அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறி சுட்டு கொல்வது தான் இஸ்ரேலின் திட்டம்.


SANKAR
ஜூன் 16, 2025 18:23

yes I agree.i an israel supporter and anti terrorist mentality....but feel israel is OVER DOING IT AND MUST EITHER REDUCE OR STOP SUCH ATTACKS


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 18:13

அப்பாவி மக்கள் மீதும், பெண்கள், குழந்தைகள் மீதும் யார் தாக்கினாலும் அது எந்த காரணமாக இருந்தாலும், அதற்கான பேரழிவை அவர்கள் சந்திப்பார்கள் என்பது இந்து மதத்தின் நீதி. இஸ்ரேல் நாடு, காசாவை சார்ந்த அப்பாவி மக்களை, இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது. அதை ஐநாசபை, இந்தியா, அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் வேடிக்கை பார்க்கிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்பதை இஸ்ரேல் மறந்து விட்டது.


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 19:56

ஏலே ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு செய்த கொடிய வினைக்கு எதிர்வினையாகத்தான் இஸ்ரேல் காஸாவை போட்டுத்தள்ளிக் கொண்டு இருக்கிறது கருத்துப்...போடுறேன்னு எதையாவது உளறாதே


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 20:14

அப்படினா ஹமாஸ் தீவிரவாதிகள் தேடி பிடித்து கொல்லாமல், ஆயுதம் இல்லாத மக்களை கொல்வது சரியா? உன் ஊரை சார்ந்தவன் செய்த தவறுக்கு உன்னையும், உன் குடும்பத்தையும் கொல்வது சரியா ? இதுக்கு தான் படிங்கடா, படிங்கடான்னு சொல்றது.. தற்குறி போல பேசுவது தவறு.


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 20:52

நீ ஒரு படித்தவர் தான் என்பது உன் கருத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.


Kumar Kumzi
ஜூன் 16, 2025 21:57

கூமுட்ட மதம் என்ற போர்வையில் உலகின் அமைதியையே கெடுக்குறான் அவனுக்கு முட்டு குடுக்குற நீ தான் சரியான கூமுட்ட கோவை சம்பவத்தை மறந்துட்டியா..த்தூ


புதிய வீடியோ