உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நெதன்யாகுவை கைது செய்யும் முடிவு: கைவிடுமாறு கனடாவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தல்

நெதன்யாகுவை கைது செய்யும் முடிவு: கைவிடுமாறு கனடாவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தல்

ஒட்டாவா: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான கைது வாரண்ட் உத்தரவு அமல்படுத்தும் முடிவை கைவிடுமாறு கனடாவை இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது.காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.தற்போது, இஸ்ரேல்-காசா போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அதேசமயம் அவருக்கு எதிரான கைது வாரண்ட் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.இந்நிலையில், 'தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு தடையாக இருக்கிறார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார்' என கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியிருந்தார்.இந்த முடிவை கைவிடுமாறு இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ