உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேல் இணைக்காது: அரபு நாடுகளுக்கு டிரம்ப் உறுதி

மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேல் இணைக்காது: அரபு நாடுகளுக்கு டிரம்ப் உறுதி

வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேல் தங்கள் நாட்டுடன் இணைக்காது என்று இஸ்லாமிய நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.இது குறித்து டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: காசாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தமாக இருக்கும். உயிருள்ள 20 பிணைக்கைதிகள் உட்பட 38 இறந்த பிணைக்கைதிகளையும் மீட்டு வர வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dcl78ub7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாங்கள் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். நாங்கள் ஏதோ ஒரு ஒப்பந்தத்தை முடிக்க நெருங்கிவிட்டோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக சூசகமாக கூறியுள்ளார்.முன்னதாக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் சந்தித்தார். மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்காது என்று அவர்களுக்கு உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

s.sivarajan
செப் 27, 2025 08:43

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் நிலை தரப்புக்கு.


Ravi
செப் 27, 2025 07:20

ஆறு வழி சாலைக்கு நடுவில் மாட்டிக்கொண்ட இரண்டு சென்ட் வீடு போல மேற்கு கரை வாழ தகுதி இன்றி மிச்சம் இருக்கிறது. இனி அதை ஆக்கிரமிப்பு செய்தாலே செய்யாமல் விட்டாலே ஒன்றும் மாறப் போவது இல்லை


Nathan
செப் 27, 2025 07:03

இவருக்கு தான் நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்துள்ளது பாகிஸ்தான்.இவர் காசாவில் ரிசார்ட் கட்ட நிதியுதவி கத்தார் விமானமாக வழங்கி உள்ளது. சவுதி அரேபியா முதலீடாக வழங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. விரைவில் காசா ரிசார்ட் விடுமுறை சுற்றுலா செல்ல அசீம் முனீர் திட்டமிட்டு உள்ளார். இஸ்லாமிய நாடுகள் பலே பலே . அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்க அடிமைகள் இவர்கள் எப்போதும் நிமிர்ந்து அமெரிக்காவை எதிர்த்து எதுவும் பேச இயலாது


Kasimani Baskaran
செப் 27, 2025 06:57

அதெப்படி முடியும். இஸ்ரேலிடம் இவரது பஞ்சாயத்து செல்லாது.


alagar
செப் 27, 2025 05:35

பப்ளிசிட்டி தேடுகிறார் டிரம்ப்


Kumar
செப் 27, 2025 02:15

இவனோட பேச்சை இவனே நம்பறது இல்லை.


Ramesh Sargam
செப் 27, 2025 02:12

இந்த டிரம்ப் அமெரிக்க நாட்டிற்கு அதிபரா, அல்லது ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே அதிபரா? தன்னுடைய நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவும் காணாமல், எப்பொழுதும் உலக பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்துகிறார். இவர் மூக்கை நுழைப்பதால் அந்த பிரச்சினைகள் அதிகம் ஆகிறதே தவிர முடிவுக்கு வருவதில்லை.


Arul Narayanan
செப் 26, 2025 23:57

மேற்கு கரையில் ஏற்கனவே ஏராளமான யூதர்களை குடியமர்த்திக் கொண்டு உள்ளது இஸ்ரேல். ஜெருசலேம் நகரையும் பாதி ஆக்கிரமித்து உள்ளது.


Ganesh
செப் 26, 2025 23:15

நீங்க சொல்றத அப்படியே ஓடுற தண்ணில எழுதிக்கலாமா சார்?


தாமரை மலர்கிறது
செப் 26, 2025 22:55

ட்ரம்ப் சொல்வதை அவரது மனைவி கூட நம்பமாட்டார். மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேல் இணைப்பது பாலஸ்தீனியர்கள் வாழ்க்கைக்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை