உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.நா., அறிக்கையை கிழித்துப் போட்ட இஸ்ரேல் தூதர்

ஐ.நா., அறிக்கையை கிழித்துப் போட்ட இஸ்ரேல் தூதர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோபமடைந்த இஸ்ரேல் தூதர் ஐ.நா.,வின் அறிக்கையை கிழித்துப் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.மேற்காசியாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள ரபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து, ஹமாஸ் படையினர் உள்ள பகுதிகளை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி வருகிறது.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் பார்வையாளராக உள்ளது. அந்நாட்டை, முழுநேர உறுப்பினராக ஆக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக ஓட்டுப் போட்டன. அமெரிக்க, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 25 நாடுகள் புறக்கணித்தன.இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.நா.,விற்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், ஐ.நா.,வின் அறிக்கை நகலை, இயந்திரத்தில் போட்டு சுக்குநூறாக கிழித்துப் போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

tata sumo
மே 11, 2024 20:58

isreal must destroy whole palastine due to there attack on isreal


Syed ghouse basha
மே 11, 2024 15:20

யாருக்கும் கட்டுப்படாத இஸ்ரேலை கட்டுப்படுத்த பன்னாட்டு படையை உடனே அனுப்பி இஸ்ரேலின் அடாவடியை தடுத்து நிறுத்தி சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டடும் செய்வார்களா?


Nagendran,Erode
மே 12, 2024 06:58

பன்னாட்டுப் படைய அனுப்பணுமா சிரிப்பு காட்டாத!


Nagarajan D
மே 11, 2024 15:14

மிக சரியான செயல் தான் எவனுமே மதிக்காத ஒரு கூட்டத்தின் அறிக்கையை எதற்க்காக மதிக்க வேண்டும்? ஏற்றாவது அமெரிக்கா மதித்ததா? என்றாவது இஸ்லாமிய நாடுகள் மதித்ததா? பிறகு எதற்கு இஸ்ரேல் மதிக்கவேண்டும்? ஐ நா அறிக்கைகள் குப்பையில் போட படவே தகுதி படைத்தவை


Natarajan Ramanathan
மே 11, 2024 13:35

தீவிரவாத இயக்கமான பாலத்தீனத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது அநியாயம்


RAJ
மே 11, 2024 11:28

Wow You are the man


மேலும் செய்திகள்







புதிய வீடியோ