உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இரு நாளில் 350 பேரை கொன்ற இஸ்ரேல் ராணுவம்: ஹமாஸ் குற்றச்சாட்டு

இரு நாளில் 350 பேரை கொன்ற இஸ்ரேல் ராணுவம்: ஹமாஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப் போவதாக இஸ்ரேல் பிரதமர் சவால் விடுத்துள்ளார். காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில் கடந்த சில நாள்களாகவே இஸ்ரேல் ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேல் படையினர் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 26,422ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டு வீச்சில் இதுவரை 65,087 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஜன 29, 2024 16:50

இப்போது கணக்கு சொல்லும் இவர்கள்... இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது.... அவர்களுக்கும் அப்படி தானே வலித்து இருக்கும்.... உங்களுக்கு வந்தா ரத்தம்.... அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா ???


Yaro Oruvan
ஜன 29, 2024 15:41

கடந்த அக்டோபர் மாதம் பின்னாடி வழியா போயி ஆயிரத்து ஐநூறு நபர்களை கொலை செய்த செயலை இன்னான்னு சொல்றது .. ஆரம்பிக்க முன்னாடி யோசிக்கோணும்


Yaro Oruvan
ஜன 29, 2024 15:39

avin


KavikumarRam
ஜன 29, 2024 15:05

ஹமாஸால் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு அண்டை முஸ்லீம் நாடுகளான ஈஜிப்ட், சிரியா, ஜோர்டான், லெபனான் அடைக்கலம் குடுக்காம துரத்தி விடுகிறார்கள். அவர்களின் இஸ்ரேல் உடனான பகையை ஹமாஸ் பயங்கரவாதிகள் மூலம் நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்கள். தன் குடிமக்களுக்கே ஹமாஸ் துரோகம் செய்து கொண்டு இருக்கிறது. இந்த ஹமாஸால் மனிதக்கேடயங்களாக பலஸ்தீன மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மக்கள் மீது எந்த தீவிரவாத குழுக்களுக்கும் அக்கறையே இல்லை. இந்த குழுக்களின் தலைவர்கள் வேறு வேறு நாடுகளில் மிகவும் சொகுசு வாழ்க்கை வாழுறார்கள். ஆனால் பாதிப்பு என்னவோ இந்த மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கும் அப்பாவி மக்களுக்கும் தான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 29, 2024 13:09

ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து கடத்திவந்த பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அது நடக்காத வரை இஸ்ரேல் தாக்குதல் நிற்காது. ஒன்றுமறியாத அப்பாவிகளை கடத்தி வைத்துக்கொண்டு பேரம் பேசுவதை ஹமாஸ் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் பாலஸ்தீனம் அழிவது உறுதி. அரபு நாடுகளே பாலஸ்தீன மக்களுக்காக இன்றுவரை வெறும் வாய்பந்தல்தான் போடுகின்றனர். பணயக்கைதிகளை விடுவிக்காத வரை ஒருவரும் உதவ மாட்டார்கள். அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்பு தோன்றியுள்ளது. இதை புரிந்துகொண்டவன் பிஸ்தா.


திரு.திருராம்
ஜன 29, 2024 13:01

சண்டைனா சட்டை கிழியத்தானே செய்யும்,,,,,அதுக்கெல்லாம் ரெடியானாத்தானே சண்டைக்கு இழுக்கோணும், சண்டை வந்தா எவன் எல்லாம் நமக்காக வருவான், வருவேன்னு சொல்லிட்டு வராம இருப்பான், எவன் எல்லாம் வேடிக்கை மட்டும் பாப்பான்,,,,எதிரிக்காக எவன்லாம் இறங்குவான், இதெல்லாம் கணக்கு போட்டுதான் சண்டையில இறங்கோணும்,,,,,,


Nagarajan D
ஜன 29, 2024 12:50

350 மட்டுமே மரணமா? இஸ்ரேலுக்கு இது அவமானம்... சும்மா 350000 இஸ்லாமிய தீவிரவாதிகளை போட்டு தள்ளியிருந்தால் உலகமே சந்தோஷ பட்டிருக்கும்


Pandi Muni
ஜன 29, 2024 19:13

ஒரு 35 லட்சம் ஓகே.


Iniyan
ஜன 29, 2024 12:37

இஸ்ரேல் நல்லது தானே செய்திருக்கு


Pandi Muni
ஜன 29, 2024 19:13

ரொம்பவுமே கம்மியா நல்லது பண்ணியிருக்கு.


Sridhar
ஜன 29, 2024 12:12

வெறும் 350 பேர் தானா? இன்னும் எவ்வளவு பேர் அழிந்தால் இந்த ஹமாஸ் முற்றிலுமாக அழியும்? பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கு அவ்வளவு வருத்தம் இருந்தால், உடனே பிணைக் கைதிகளை விடுவித்து இஸ்ரேலிடம் வெள்ளைக்கொடி காண்பித்து சரணடைய வேண்டியதுதானே? ஏன் பிறநாடுகள் பாலஸ்தீனிய மக்களின் நல்வாழ்வுக்கு கொடுத்த நிதிகளை சுரங்கம் கட்டுவதற்கும் ஆயுதங்கள் வாங்குவதற்கும் செலவழித்துவிட்டு இன்று வரை அப்பாவி பிணைக்கைதிகளை விடுவிக்காமல் அப்பகுதி மக்கள் எல்லோருடைய சாவுக்கும் காரணமாய் இருக்கிற ஹமாஸ் பயங்கரவாதிகள் ஓலமிடுகிறார்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை