உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: ''இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிக்கொண்டே இருந்தால்,தெஹ்ரான் எரிந்துவிடும்' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், ஈரானை எச்சரித்தார்.இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. ஈரானில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uv7nsqox&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது ஏவுகணைகளை வீசிக்கொண்டே இருந்தால்,'ஈரான் தலைநகர் தெஹ்ரான் எரிந்துவிடும்' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஈரான் சர்வதிகாரி, அந்நாட்டு மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரம் வந்துவிட்டது. குறிப்பாக தெஹ்ரானின் குடியிருப்பாளர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு செய்து வரும் தீங்கிற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.இஸ்ரேலில் வசிக்கும் மக்களின் வீடுகள் மீது, தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினால் ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எச்சரிக்கை இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் சம்பவங்கள் தொடரும் என்பதை எடுத்துரைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ameen
ஜூன் 15, 2025 09:43

வெறும் ட்ரைலர்க்கே அலறுகிறாய்....


ராமகிருஷ்ணன்
ஜூன் 15, 2025 04:24

இஸ்ரேல் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியவிடம் வாங்கி பயன்படுத்த வேண்டும். குறைந்த விலையில் வழங்கப்படும்.


Natanasabapathy pillai
ஜூன் 14, 2025 21:22

சும்மா வாயால் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். ஈரானை அடித்து நொறுக்குங்கள்


Haja Kuthubdeen
ஜூன் 15, 2025 08:46

ரஸ்ய அதிபர் மூலம் போரை நிறுத்த இஸ்ரேல் கெஞ்சுவது ஏனோ!!??


தமிழ்வேள்
ஜூன் 14, 2025 19:52

காரணமின்றி காரியம் இல்லை.... என்ற சனாதன தத்துவத்தின் சமகால வெளிப்பாடு... மூர்க்க மார்க்க தீவிரவாதம் குறையும்போது மட்டுமே இஸ்ரேலின் தாக்குதல் முனைப்பும் குறையும்...


ameen
ஜூன் 15, 2025 09:45

கொசுவை அழிப்பது போல் அந்த தத்துவம் அழிக்கப்படும்...சும்மா கிடந்த ஈரானை சீண்டியது இஸ்ரேல்....இப்போ வாங்கி கட்டிக்கிறான்....


தமிழ்வேள்
ஜூன் 20, 2025 20:08

அமீன்,சாதனத்தை அழிப்பது பகல் கனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு... 74 சதுர்யுகங்களாக, 74 முஹம்மது கும்பல்களால் இயலாத ஒன்று இனிமேலா நடக்கப் போகிறது?


Elango S
ஜூன் 14, 2025 19:22

இரான் தலைநகர் பற்றி எரியலாம் ஆனால் இஸ்ரேல் தலைநகர் மட்டும் மழையில் நனைய வேண்டுமா உயிர்கள் எல்லாம் ஒன்று தான்


தியாகு
ஜூன் 14, 2025 23:23

மூர்க்க உயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் வித்தியாசம் உண்டு.


Haja Kuthubdeen
ஜூன் 14, 2025 18:52

அமெரிக்கா இருக்கும் வரை உலகில் எங்காவது போர் நடந்த வன்னமே இருக்கும். அமெரிக்காவை பகைத்து கொள்ளும் எவனையும் அது ஏதாவது செய்து கொண்டே இருக்கும்.


Nada Rajan
ஜூன் 14, 2025 17:59

எல்லா நாட்டு பிரச்னைகளையும் மூக்கு நுழைக்கும் அமெரிக்கா இருக்கும் வரை போர் பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை