உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவுக்கு வந்த இஸ்ரேல் - லெபனான் போர்; பிரதமர் நெதன்யாகு சொல்வது இதுதான்!

முடிவுக்கு வந்த இஸ்ரேல் - லெபனான் போர்; பிரதமர் நெதன்யாகு சொல்வது இதுதான்!

ஜெருசலேம்: இஸ்ரேல் - லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. 'லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குவோம்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் வாக்கி டாக்கி, பேஜர் உள்ளிட்டவற்றை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டனர். போரில் இதுவரை பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.தற்போது, இஸ்ரேல் - லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி: இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி நாளை முதல் போர் முடிவுக்கு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும். போரை முடிவுக்கு கொண்டு வர லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் எடுத்த துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். இது அமைதிக்கு சாத்தியம் என்பதை காட்டுகிறது. இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையிலான எல்லையில் அமெரிக்கா ஆயுதக் குழுக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து தேவையான உதவிகளை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.முடிவுக்கு வந்த போர் குறித்து, சமூகவலைதளத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் புரிதலோடு போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குவோம். ராக்கெட் ஏவினாலும், சுரங்கம் தோண்டினாலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும். ராக்கெட்டுகளை சுமந்து லாரிகள் வந்தாலும் தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

AMLA ASOKAN
நவ 27, 2024 20:34

1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் பாலஸ்தீன் என்ற நாட்டின் 7 லட்சம் மக்களை வெளியேற்றி 80 % இடத்தை பிடுங்கி இஸ்ரேல் என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்ட து . இன்று இஸ்ரேல் அதை சுற்றியுள்ள அரபு நாடுகளின் நிலங்களை மிகப் பெரியளவில் அமெரிக்கா , பிரிட்டன் ஆதரவுடன் ஆக்கிரமித்து விட்டது . அங்கு வாழ்ந்த 80 லட்சம் மக்கள் இன்று வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். தாய் நாட்டை மீட்டு எடுப்பதற்காக போராடுபவர்க இஸ்ரேல் மேலும் ஆக்கிரமிப்பு செய்யாமலும் ,ஆக்கிரமித்த பகுதிகளில் குடியமர்த்துவதை தவிர்த்தும் , சில பகுதிகளை விட்டுக் கொடுத்தால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும் .


Raj S
நவ 27, 2024 21:23

அதாவது குல்லா காரனும், சிலுவை மதம் மாற்றிகளும் நம்ம பாரத நாட்டுல பரவி ஹிந்துக்களின் நிலங்களையும், பொருளாதாரத்தையும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பறிக்கிற மாதிரின்னு சொல்றீங்க... சரிதான?? இத சொன்னா திருட்டு திராவிடன் ஒத்துக்க மாட்டானே...


RAVINDRAN.G
நவ 27, 2024 16:48

தீவிரவாதம் எந்த மதம் இனம் மொழியா இருந்தாலும் ஒழிக்கவேண்டும்


AMLA ASOKAN
நவ 27, 2024 21:45

இஸ்ரேல் நேர்மையுடன் சமரசம் செய்து கொண்டால் போர் முடிந்து விடும் . அரபு யூதர்கள் பகை அகன்று விடும் . அமைதி ஏற்பட்டுவிடும் .


GMM
நவ 27, 2024 14:10

இஸ்ரேல் முடிவு சரியல்ல. தீவிரவாதிகளை உலக நாடுகள் உதவி பெற்று, வேருடன் அகற்ற வேண்டும். தீவிரவாத உணர்வு மக்களிடம் போர் ஆயுதங்கள் இருக்க கூடாது. போர் முடித்து வைக்கப் பட்டுள்ளது. மீண்டும் எழும்.


SUBRAMANIAN P
நவ 27, 2024 13:27

டிரம்புக்கு வேலை இல்லாம பண்ணிட்டான்


Sami Sam
நவ 27, 2024 12:59

உண்மையான போர் நிறுத்தம் என்றால் உலக நாடுகள் அனைத்தும் வரவேற்கும் கால அவகாசம் தேவைக்காக என்றால் போர் நிறுத்தம் அர்த்த மற்றதாகிவிடும்


Bye Pass
நவ 27, 2024 12:59

சரித்திரத்தை புரட்டி பார்த்தால் அவர்கள் வலுவில்லாமல் இருக்கும்போது அமைதி பேசுவதும் சமயம் பார்த்து தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணம்


Barakat Ali
நவ 27, 2024 13:18

புலிகளின் பழக்கமும் அதுதான் .......


SUBBU,MADURAI
நவ 27, 2024 19:11

The ceasefire began at 4:00 AM. Hezbollah has not launched anything since 11:30 PM. They had four and a half hours to launch everything they had, yet they did not launch anything at all. Do you know why? Because they had nothing. They were getting absolutely destroyed by Israel.


முக்கிய வீடியோ