உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: செய்தியாளர்கள் 31 பேர் பலி

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: செய்தியாளர்கள் 31 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சனா: ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023ம் ஆண்டு முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் நாளிதழ் அலுவலக கட்டடத்தை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் நாளிதழின் தலைமை ஆசிரியர், 30 செய்தியாளர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 131 பேர் காயமடைந்தனர் என்று ஏமனின் ஹவுதி படையினர் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ''இந்த தாக்குதல் மிருகத்தனமானது மற்றும் நியாயமற்றது'' என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
செப் 22, 2025 08:11

செய்தியாளர்கள் யாரும் இறக்க வாய்பில்லை... செத்தது அனைவரும் தீவிரவாதிகளாக தான் இருப்பார்கள்... வெளியே இப்படி தான் புரளியை கிளப்பி விடுகிறார்கள் .


M Ramachandran
செப் 21, 2025 15:37

சிறிய இஸ்ரயேலுக்குள் தில் யாருக்கும் இல்லை வேண்டும்.


visu
செப் 21, 2025 15:32

அப்ப இங்க இருந்து தீபாவளி ராக்கெட் மாதிரி இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பினீங்களே அதெல்லாம் என்ன அன்பான தாக்குதலா நல்லா உதை வாங்கினால்தான் திருந்துவாங்க


திகழ் ஓவியன் எனும் Oviya Vijay
செப் 21, 2025 13:53

ஆறுதல் சொல்ல, இன்றே ஏமன் செல்வரோ...RIP...


தஞ்சை மாமன்னர்
செப் 21, 2025 14:23

அடடா முன்பாகவே தெரிந்தால் அதற்கும் சேர்த்து ஒரே கண்டன கூட்டமா நடத்தி இருக்கலாமே...


சங்கர்,தென்காசி
செப் 21, 2025 15:26

வெறும் போலி மன்னராக இருந்தவர்கள் எல்லாம் இப்போது பதவி உயர்வு பெற்று மாமன்னர்கள் ஆகி விட்டனர் என்ன கொடுமை?


Kasimani Baskaran
செப் 21, 2025 13:08

இஸ்ரேல் மெத்து ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மட்டும் மனிதனமானதாக்கும்? சாத்தான் வேதம் ஓதுவது என்றால் அது இதுதான்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 21, 2025 12:45

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வான் தாக்குதலில் ஈடுபடும்போது தரையிலிருந்து உளவுச்செய்தி இல்லாதபட்சத்தில் இலக்காகும் கட்டடமோ, ராணுவத்தளமோ, அதிபர் மாளிகையோ, எதுவாக இருந்தாலும் அங்கு எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் வாய்பில்லை. அன்று சாகவேண்டும் என்ற விதி யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் சாக வேண்டியதுதான். இந்தியாவில் 26/11 மும்பை தாக்குதலிலோ, பகல்காம் தாக்குதலிலோ, கோவை குண்டுவெடிப்பு நிகழ்விலோ யார் யார் இருப்பார்கள், எவ்வளவு பேர் உயிரிழப்பார்கள் என்று யாருக்காவது தெரியுமா என்ன? தீவிரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதிலடி கொடுத்தால் மட்டுமே அடங்குவார்கள். இஸ்ரேலின் செயலில் தவறொன்றுமில்லை.


முதல் தமிழன்
செப் 21, 2025 11:58

ஏமென் அழிக்கப்பட வேண்டிய நாடுதான். எங்கெல்லாம் தீவிரவாதம் விதைக்க படுகிறதோ அதை அழித்தொழிப்பது நல்லதுதான். எங்கெல்லாம் தீவிரவாதத்துக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்களும் அழித்தொழிக்கப்பட வேண்டும் அடியோடு வேரடி மண்ணோடு ஒழிக்க வேண்டும். சும்மா சிந்தூர் ஒரு நாள் ஆபரேஷன் தேர்தலுக்கு பயன்படலாம் ஆனால் தினம் தினம் அவனுங்களை ஆபரேஷன் பண்ணுனாத்தான் ஒழிக்க முடியும்.


சின்னப்பா
செப் 21, 2025 11:41

ஏமனுக்கு ஏன் அவ்வளவு செய்தியாளர்கள்? உண்மையிலேயே செய்தியாளர்கள் தானா?


Thravisham
செப் 21, 2025 13:58

இங்கு பல ஊடகங்கள் திருட்டு த்ரவிஷன்களின் கைப்பாவை போல அங்கு செய்தியாளர்களின் போர்வையில் தீவிரவாதிகள். அவ்வளவே


புதிய வீடியோ