உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கைரோ: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்கிறார். அதற்கு முன்னதாக இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்த நிலையில், காசாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 12 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 88 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Duruvesan
பிப் 02, 2025 09:31

இஸ்ரேல் பாஸ் நல்லதே நடக்கட்டும்,


Kasimani Baskaran
ஜன 06, 2025 15:45

பாலஸ்தீனர்களுக்கு சுபிட்சத்தை காட்டியது இஸ்ரேல் மட்டுமே. ஆனால் நன்றி மறந்து தீவிரவாதிகள் தங்களை வெற்றிப்பாதையில் கொண்டு போவார்கள் என்று நம்பி மோசம்போனதுதான் மிச்சம்.


Bahurudeen Ali Ahamed
ஜன 07, 2025 10:54

சகோதரா இங்கிலாந்துக்காரன் இந்தியாவை ஆட்சிசெய்யும்போது ரெயில் பாதை அமைத்து போக்குவரத்தை எளிதாக்கினான், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தினான், கல்விநிலையங்கள் அமைத்தான் இன்னும் பல, ஆனால் இதெல்லாம் எதற்காக இந்த வசதியெல்லாம் ஏற்படுத்தினான் அவன் இங்கிலாந்துக்காரன் வசதியாக வாழ்வதற்கும் இந்தியாவை சுரண்டுவதற்கும் சரிதானே? அதை உணர்ந்த நாம் அவனை காந்திய வழியிலும் நேதாஜி வழியிலும் எதிர்ப்பு தெரிவித்து போராடி விரட்டினோம் நம் மண்ணை மீட்டோம், அதேதான் பாலஸ்தீனிலும் நடக்கிறது, நான் உங்களை ஒன்று கேட்கிறேன் அன்று ஜாலியன் வாலா பாக்கில் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்று கூடினார்கள் என்ன நடந்தது ஜெனரல் டயர் அனைவரையும் சுட்டுக்கொன்றான், தம் சொந்த மண்ணை மீட்க ஒன்று சேர்ந்த மக்களை கொன்று குவித்த அயோக்கிய வெள்ளையன் வேலையைத்தான் இன்று தம் சொந்த மண்ணை மீட்க போராடும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கொலைவெறித்தாக்குதல் நடத்துகிறது


Bahurudeen Ali Ahamed
ஜன 06, 2025 13:52

திரு ஆருர் ரங் அவர்களே 1948 க்கு முன் இஸ்ரேல் என்ற நாடு இருந்ததா, யூதர்கள் ரோமானிய படையெடுப்பின்போது உயிருக்கு பயந்து மற்றநாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள், அவர்கள் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்தார்கள் யூதர்களுக்கென்று ஒருநாடு வேண்டுமென்ற கோரிக்கையில் பெற்றதுதான் இஸ்ரேல், பாலஸ்தீனிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு யூதர்களுக்கு அளிக்கப்பட்டது அதுதான் இஸ்ரேல் என்றானது, அதுவல்ல பிரச்சினை ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டின கதையாய் அகதிகளாக வந்த யூதர்களுக்கு இடமளித்த பாலஸ்தீனியர்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்கள் அதற்காக வன்முறையை பிரயோகித்தார்கள் குழந்தைகள் மற்றும் பெண்களை கொன்று குவித்தார்கள் இது நியாயமா, மேலும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் என்ற நாடு இருக்கக்கூடாது என்று போராடவில்லை, 1948ல் பிரிவினைக்கு அப்புறம் கிடைத்த அவர்களின் சொந்த நிலத்திற்காகத்தான் போராடுகிறார்கள், உங்களை ஒன்று கேட்கிறேன் ஒரு பாகிஸ்தானியன் ஒருவன் இப்பொழுது வந்து 1947 பிரிவினைக்கு முன் இந்தியாவில்தான் வாழ்ந்திருந்தோம் ஆகையால் குறிப்பிட்ட நிலம் எனக்கு சொந்தம் என்று கூறினால் நம்மால் ஒப்புக்கொள்ள முடியுமா?


Bahurudeen Ali Ahamed
ஜன 06, 2025 11:42

உண்மையை சொன்னால் இஸ்ரேல்தான் ஆக்கிரமிப்பு பயங்கரவாதிகள், இஸ்ரேல் ராணுவம் பணபலம் ஆயுதபலம் கொண்டு பாலஸ்தீனை ஆக்கிரமிக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளை கொத்து கொத்தாக கொன்று பாலஸ்தீனியர்களை சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கி வைத்திருக்கிறார்கள், தன் சொந்த நிலத்தை உரிமையை இழந்தவன் போராடத்தான் செய்வான், அது ஒருபுறம் இருக்கட்டும் சண்டை ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும்தானே ஹமாஸுடன் சண்டை செய்வதுதானே நியாயம் அதை விடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை கொள்கிறார்கள், இஸ்ரேல் பணயக்கைதிகள் 100 பேரைப்பற்றி கவலைப்படும் சகோதரர்களே இஸ்ரேலிய சிறைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள், சிறுவர்கள் முதற்கொண்டு அடைபட்டிருக்கிறார்களே அது சரியா


ஆரூர் ரங்
ஜன 06, 2025 12:19

நபிகள் காலத்தில பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருந்ததில்லை?. இருந்திருந்தால் யார் அரசனாக இருந்தார்? ஆனால் 3000 ஆண்டுகளுக்கு? முன்பே இஸ்ரேல் இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது


Barakat Ali
ஜன 06, 2025 10:26

விரைவில் முடிவு ஏற்படவேண்டும் ....


user name
ஜன 06, 2025 10:22

இஸ்ரேலை பொறுத்தவரை காஸாவில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே, இஸ்ரேலுக்கு முட்டு கொடுக்கும் சங்கிகள் அதி பயங்கரவாதிகள் .


Duruvesan
பிப் 02, 2025 09:02

சொந்த பெயர் உள்ள ஹிந்து, இஸ்லாமியர் எனது சகோதரர்கள், அடுத்தவனை குண்டு வைத்து கொள்ளும் மார்க்கம் எல்லோரும் தீராவாதிகள் இல்லை


பெரிய ராசு
ஜன 06, 2025 10:14

இந்திய என்றும் உங்களோடு அடித்து துவம்சம் செயுங்க


ALWAR
ஜன 06, 2025 00:54

சூப்பர் .இந்தியா உங்களோடு நிற்கும் .. இஸ்ரேல் வெற்றி அடைய வாழ்த்துக்கள்


தாமரை மலர்கிறது
ஜன 06, 2025 00:36

ஒவ்வொரு நாடும் பயங்கரவாதிகளை எப்படி கையாள்வது என்று இஸ்ரேலிடம் கற்றுக்கொல்ல வேண்டும்.


MUTHU
ஜன 06, 2025 11:32

தவறு. இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஆன் இதனை கற்றுக்கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்திடம் எதிர்கொள்ளும் பொழுது தான் இரக்கமின்றி சுட்டு கொல்லப்பட்டு விடுவார்கள். பிடிபட்டு ஒருவேளை ஜெயிலுக்குள் சென்றால், இஸ்ரேலியர்கள் சட்டம் மேலை நாடுகளை விட மிகவும் மென்மையானது. தீவிரவாதிகளிடமும் இரக்கம் காட்டும். ஆனால் ஒரு சில நாடுகள் தவிர மற்ற இஸ்லாமிய நாடுகளின் சட்டம் மிகவும் கடுமையானது. கொடுமையானது. பிடிபட்ட ஒன்றிரண்டு மாதத்திற்குள் கொடூரமாய் கொல்லப்பட்டு விடுவார்கள். இரக்கமே காட்டமாட்டார்கள். அதனால் அங்கு தீவிரவாதிகள் எண்ணிக்கை குறைவு. கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை