உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே ஒரு ஐபோன் வாங்க 47.6 நாட்கள் உழைக்கணும்; இந்தியாவில் இதுதான் நிலவரம்!

ஒரே ஒரு ஐபோன் வாங்க 47.6 நாட்கள் உழைக்கணும்; இந்தியாவில் இதுதான் நிலவரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஐபோன் 16 மாடலை வாங்குவதற்கு ஒருவர் எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும் என வெவ்வேறு நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.அதின்படி இந்தியாவில் 47.6 நாட்கள் ஒருவர் உழைத்தால் அந்த போனை வாங்க முடியும் எனக்கூறப்பட்டு உள்ளது.ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸின் விற்பனையை துவக்கி உள்ளது. ஐபோன் 16 விலை ரூ.79,900 ஆகவும், ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900 ஆகவும், ஐபோன் 16 புரோ ரூ.1,19,900 ஆகவும், ஐபோன் 16 புரோ மேக்ஸ் விலை ரூ.1,44,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்த போனை வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. சிலர் கவுரவத்திற்காக இந்த மாடல் போன்களை வாங்கி வந்தனர். இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த மாடல் போன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் ஐபோன்களின் அதிகாரப்பூர்வ விலையை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வெவ்வேறு நாடுகளில் ஒருவர் எத்தனை நாட்கள் பணிபுரிந்தால், அதில் கிடைக்கும் சம்பளம் பணம் மூலம் வேண்டும் என கணக்கிடப்பட்டது. இதன் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஐபோனை வாங்க சுவிட்சர்லாந்தில் ஒருவர் 4 நாட்கள் பணிபுரிந்தால் போதுமானது.அமெரிக்காவில் 5.1 நாட்களும்ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் 5.7 நாட்களும் ஒருவர் பணிபுரிந்தால் ஐபோன் வாங்க முடியும்இந்தியாவில் ஐபோன் 16 வாங்க 47.6 நாட்கள் உழைக்க வேண்டும்அதிகபட்சமாக துருக்கியில் 72.9 நாட்களும் பிலிப்பைன்சில் 68.8 நாட்களும், பிரேசிலில் 68.6 நாட்களும் வியாட்நாமில் 53.1 நாட்களும் ஒருவர் பணியாற்ற வேண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

SATHISH
செப் 22, 2024 07:37

ஒரு நாளைக்கு 1700 சம்பளம் வாங்குற ஒருத்தரால நீங்கா சொல்ற கணக்கு சாத்தியம்..இங்க மாத வருமானம் 10000 ரூபாய் கூட இல்லாதவங்க ஏஏஏராளம்..


சந்திரசேகர்
செப் 21, 2024 16:13

இது தப்பான கணக்கு.


ந பா
செப் 21, 2024 13:30

அப்ப இந்தியாவுல ஒவ்வொருத்தரும் சராசரியாகப் தினம் 1666.67 மாதம் 50000 ரூபாயும் சம்பாதிக்கிறார்கள்???


Barakat Ali
செப் 21, 2024 08:06

காசி சாருக்கு ஒரு வேண்டுகோள் ...... ஐஃபோன் பக்கமே போகமுடியாத வருமானம்தான் என்னுடையது ...... ஆன்ட்ராய்ட் ஃபோனை ஐஃபோன் அளவுக்கு செக்யூர்ட் ஆக மாற்ற என்ன செய்யணும் ? ப்ளீஸ் சொல்லுங்க ...


Natarajan Ramanathan
செப் 20, 2024 23:57

திராவிட குடும்பத்தில் இருந்தால் உழைக்காமலேயே எத்தனை ஐபோன் வேண்டுமானாலும் வாங்கமுடியும்.


J.Isaac
செப் 21, 2024 08:10

அடுத்தவனை குறை சொல்லியே திரிகிறவன் உருப்படவே முடியாது. பொறாமை அது எருமைக்கு சமானம்


அப்புசாமி
செப் 20, 2024 23:00

ஐ.ஃபோன் விலை 80000. கிட்டத்தட்ட தினமும் 1700 ரூவா சம்பாரிச்சா ஒரு ஐ.ஃபோன் வாங்கிடலாம். பாக்கி புவாவுக்கு என்ன செய்யறது? ஐ.ஃபோனில் சமையல் சேனலை பாத்துக்கிட்டிருந்தா சாப்புட்ட மாதிரி. பசியே இருக்காது.


Kasimani Baskaran
செப் 20, 2024 22:44

ஒருவாரம் உழைத்து வாங்கிவிட்டேன்... வைட் ஆங்கிள் காமிரா பிரமாதம்.


முக்கிய வீடியோ