உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒண்டாரியா: அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார்.ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.இந்த மாநாட்டின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது, டில்லியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார். மேலும், இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்களுடன் கனடா துணை நிற்பதாகவும் கூறினார்.தொடர்ந்து, இரு நாடுகளிடையே எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக, இந்தியா - கனடா இடையேயான சட்ட அமலாக்க ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை