உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

ஜப்பானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் நேற்று முன்தினம், 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கடலோரத்தில் உள்ள நோடோ, இஷிகவா மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து, 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jso45xe3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 62 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை வானிலை மையம், நேற்று திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
ஜன 03, 2024 07:28

மிகவும் வேதனையான இயற்க்கை பேரிடர். எல்லாம்வல்ல இறைவன் அவர்களை காத்து சேதத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்


Ramesh Sargam
ஜன 03, 2024 07:12

ஜப்பானிய மக்களை நினைத்தால் மிக வேதனையாக உள்ளது. எப்பொழுதும் நிலநடுக்கம், சுனாமி, மழைவெள்ளம் என்று தொடர்ந்து ஏதாவது இயற்கை பேரிடர்கள். ஒன்றிலிருந்து மீள்வதற்குள், மற்றொரு பேரிடர். போதாக்குறைக்கு நேற்று அங்கே ஒரு விமானம் தரை இறங்கும்போது தீவிபத்து ஏற்பட்டு அதில் ஐந்துபேர் பலி. பாவம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ