உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 13 மாதங்களாக உறங்கிய எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்; ஜப்பானில் விமான சேவைகள் ரத்து

13 மாதங்களாக உறங்கிய எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்; ஜப்பானில் விமான சேவைகள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.ஜப்பான் எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடாகும். இங்கு எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது. இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது. இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது.அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது. இது அந்நாட்டின் விமான சேவையை முற்றிலும் பாதித்துள்ளது.வான்வழி பாதையில் புகை, சாம்பல்கள் நிரம்பி காணப்பட்டதால் ககோஷிமா விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை, புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.சகுராஜிமா எரிமலை ஜப்பானின் பிரபலமான எரிமலையாகும். 2019ம் ஆண்டு நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கிமீ புகை மண்டலமாகவும், தூசுகள் நிரம்பி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V Venkatachalam, Chennai-87
நவ 17, 2025 20:02

Seismic activity tracking வழியாக முன் கூட்டியே கண்டு பிடிக்க முடியுமே. ஜப்பான் மிகவும் விஞ்ஞான உபகரணங்களை உபயோகிக்கும் நாடாயிற்றே. இந்த செய்தியில் அந்த மாதிரி விபரங்கள் இல்லை. ஏதும் பெரு விபத்து நிகழாமல் இருக்க பிரார்த்திப்போம்.‌


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை