வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Tyre puncture ஆகி இருக்கலாம்.
மசாசூசெட்ஸ்: அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிய நிலையில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான மசாசூசெட்ஸில் பாஸ்டன் லோகன் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிகாகோவின் ஓஹோர் விமான நிலையத்தில் இருந்து ஜெட்ப்ளூ 312 என்ற விமானம் வந்திறங்கியது.அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அருகே உள்ள புல்வெளி பகுதியில் சென்று நின்றது. விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. காற்றழுத்தம் அல்லது விமானத்தின் டயரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து விமான நிர்வாகத்தின் கூட்டமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
Tyre puncture ஆகி இருக்கலாம்.