உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்; சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்; சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய, ஜோ பைடன் தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என டாக்டர்கள் தெரிவித்தனர். இது நோயின் தீவிரத்தை குறிக்கிறது. பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். ''தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும்'' என பைடனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையே, ''புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது'' என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் வருத்தம்

''ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

''ஜோ பைடன் உடல்நிலை குறித்து செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saai Sundharamurthy AVK
மே 19, 2025 11:30

இந்தியாவுக்கான துரோகி ! பாகிஸ்தான், பங்களாதேஷ் விசுவாசி ! டீப் ஸ்டேட் உறுப்பினர் ! காங்கிரஸ் கட்சிக்கு மறைமுக ஆதரவாளர் !!!!!!!


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 19, 2025 09:30

இந்தியாவுக்கு நல்லது நடக்கவேண்டிய நேரத்தில நடந்திருக்கணும் .... ஆனா இப்போ ......


மீனவ நண்பன்
மே 19, 2025 07:34

ஞாபகமறதியும் அதிகம் …ரிட்டயர்டு ஜனாதிபதியாக இருந்ததால் ராஜவைத்தியம் செய்து கொள்ளலாம்


புதிய வீடியோ