உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா-இந்திய அரசியல் உறவுகளை ட்ரூடோ சிதைத்துவிட்டார்: இந்திய தூதர் வர்மா சரமாரி குற்றச்சாட்டு

கனடா-இந்திய அரசியல் உறவுகளை ட்ரூடோ சிதைத்துவிட்டார்: இந்திய தூதர் வர்மா சரமாரி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கு இடையிலான உறவு சீர்கெட்டு உள்ளது. இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என்றும் கனடா குற்றம் சாட்டியது.கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா அளித்த பேட்டி: ஆதாரங்களை முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஆனால் ஒருவர் (ட்ரூடோ) பார்லிமென்டில் நின்று ஒரு விஷயத்தைப் பற்றி பேச முடிவு செய்தார். உறுதியான ஆதாரம் இல்லை என்று அவரே கூறியுள்ளார்.உளவுத்துறையின் அடிப்படையில், நீங்கள் ஒரு உறவை அழிக்க விரும்புகிறீர்கள். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை சிதைத்துவிட்டார். கனடாவில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் காலிஸ்தானுக்கு ஆதரவானவர்கள். இந்தியாவுக்கு எதிரானவர்கள்.கனடாவில் அரசியல்வாதிகள் மிகவும் புதியவர்களாக இருப்பதால், சர்வதேச உறவுகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, எந்தப் பகுதியிலும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ கூறியது ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nallavanaga Viruppam
அக் 21, 2024 18:48

இந்திய வெளியுறவு கொள்ளகையே கொஞ்சம் சிக்கல் தான். ஒரே சமயத்தில் அமெரிக்காவுடனும் ரஷ்யாவிடனும் நட்பு பாராட்டவேண்டும் என்றால் எப்படி சாத்தியம்? சீனாவுக்கு எதிராக இருக்கும் Quad அமைப்பில் பங்குபெற்றால் இது தான் கதி. இரண்டு குதிரை மேல் சவாரி செய்யலாம் என்று எதிர்பார்த்தால் நஷ்டமே வரும். புயலுக்கு பின் ஒரு அமைதி, புயலுக்கு முன் ஒரு அமைதி, அவ்வளவே சாத்தியம்.


கல்யாணராமன் சு.
அக் 21, 2024 11:47

கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது என்பது தவரான கருத்து . ... ... உண்மை என்னவென்றால், கனடா இந்திய தூதர் "கவனிப்புக்குரிய மனிதர் person of இண்டேறேச்ட்" என்று சொன்ன உடனேயே இந்திய வெளியுறவுத்துறை ஒரு மிகவும் கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டு உடனடியாக தனது தூதரை "திரும்பப் பெற்றது" .. அதுமட்டுமில்லாமல் 6 கனடா அதிகாரிகளை வெளியேற்றும் ஆணையையும் வெளியிட்டது .... இது நடந்து 12 மணிநேரம் கழித்தே கனடா 6 இந்திய அதிகாரிகளை வெளியேற்றும் ஆணையை வெளியிட்டது .


ganapathy
அக் 21, 2024 13:30

நீ ஒரு கனடாவின் சொம்பு காலிஸ்தானின் கைத்தடி.


P. VENKATESH RAJA
அக் 21, 2024 08:39

கனடா அரசியலில் ட்ரூடோவால் பாதிப்பு அதிகம்


முக்கிய வீடியோ