உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடாபி ராணுவம்"ஸ்கட் ஏவுகணைவீசி தாக்குதல்

கடாபி ராணுவம்"ஸ்கட் ஏவுகணைவீசி தாக்குதல்

பெங்காசி: லிபியா தலைவர் மும்மர் கடாபி பதவி விலகக் கோரி, உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதுவரை கடாபியின் கையில் இருந்த நகரங்கள் ஒவ்வொன்றாக, எதிர்த்தரப்பிடம் வந்தன.இந்நிலையில், கடந்த இருநாட்களில், எதிர்த்தரப்பினர் தலைநகர் டிரிபோலியைச் சுற்றி வளைத்து, தெற்கில் உள்ள சபா நகருக்குச் செல்லும் பிரதான சாலையை, அவர்கள் மூடி விட்டனர். இதனால், டிரிபோலி, பிற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில், 'சிர்ட் நகரின் கிழக்குப் பகுதியில் கடந்த 14ம் தேதி, கடாபி ராணுவம்,'ஸ்கட்'ஏவுகணையை வீசித் தாக்குதல் நடத்தியது. அந்த ஏவுகணை, பாலைவனத்தின் ஒரு பகுதியில் விழுந்ததால் யாருக்கும் பாதிப்பில்லை' என, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை