உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு

ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக சேர, நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் - நடிகையருக்கும் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர்

'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ்' என்று அழைக்கப்படும் ஆஸ்கர் அகாடமி இந்த விருதை வழங்குகிறது. ஆண்டுதோறும் விருதுக்காக தேர்வு செய்யப்படும் குழுவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதை ஆஸ்கர் அகாடமி வழக்கமாக வைத்துஉள்ளது. அந்த வகையில், அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்ய புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுதும் இருந்து, 534 பேருக்கு உறுப்பினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் இருவரைத் தவிர, நம் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா, திரைப்பட தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்து உள்ளது.

எளிதானது அல்ல

இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தால், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 11,120 ஆகவும், ஓட்டளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக சேர்வது என்பது, அந்த விருதுக்கு விண்ணப்பிப்பது போல் எளிதானது அல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ramesh Sargam
ஜூன் 28, 2025 20:43

ஆஸ்கர் குழுவில் கொழ கொழ என்று பேசி குழப்பத்தை ஏற்படுத்திவிடுவார் கமல்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 28, 2025 16:23

ஏனுங்க இந்த ஒரு விஷயத்துக்காக இவருக்கு நேரு ஸ்டேடியத்துல பாராட்டுக்கூட்டம் நடத்தலாமா


நிவேதா
ஜூன் 28, 2025 12:48

2022இல் சூர்யா அழைக்கப்பட்டார். இப்போது கமல்.


seshadri
ஜூன் 28, 2025 12:17

இவனெல்லாம் மனிதனே கிடையாது இவனை பொய் ஆஸ்கார் குழுவில் உறுப்பினர் ஆக அழைப்பு. கேவலம்


Senthoora
ஜூன் 28, 2025 14:01

அவர் திரை உலகுக்கு ஆற்றிய சேவையை பாருங்க, தனி மனித வாழ்க்கை வேறு, கண்ணதாசனே சொன்னது, வால்மீகியும் சொன்னது நான் நல்லவன் இல்லை என்று, கமல் உண்மையான திறமைசாளிகளுக்கு விருது போகணும் என்று அடித்து சொல்லி விவாதிப்பார், ஆஸ்காரிலும் மேல்நாட்டவர் தில்லுமுல்லு பண்ணுகிறார்கள். நிட்சயம் கமல் ஒரு விவாத பொருளாக மாறுவார்,


M Ramachandran
ஜூன் 28, 2025 10:44

நிலையாற்ற மனா நிலை செயல் உடையவர். நன்ங்கு ஆராயாமல் செய்யக்கூடாது


கண்ணன்
ஜூன் 28, 2025 10:21

பாவம் அக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் நங்களது தவறினை விரைவில் உணர்வர்


Senthoora
ஜூன் 28, 2025 14:02

அப்போ நீங்க போகலாமே.


V RAMASWAMY
ஜூன் 28, 2025 08:49

இது அவரது திறமையை பாராட்டும் விருதென்று கொண்டு அவரை பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 28, 2025 08:47

ஒரு திமுக எம்பிக்கு கொடுத்த அழைப்பை திமுக தலைவருக்கு கொடுத்திருந்தால் 2026 தேர்தலுக்கு அந்த அழைப்பே 200 தொகுதிகளை வெல்லச் செய்யும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 28, 2025 07:28

மாடல் அரசின் மகத்தான சாதனை என்று போஸ்டர் ஒட்டுவார்களே


pv, முத்தூர்
ஜூன் 28, 2025 07:19

வராத அரசியலில் இருந்து விலகி, வருகின்ற கலைதுறையில் ஜெயிக்கலாம்.


angbu ganesh
ஜூன் 28, 2025 09:30

யாருக்கு கமலுக்கு அவர் தான் சிறந்த அரசியல் வியாதி எப்படி ஒரு ஓசி mp சீட் வாங்கினார் பாருங்க


முக்கிய வீடியோ