உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி

தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், தன் போராட்டம் தொடரும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் அறிவித்தார்.அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.இது தொடர்பாக, வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசியதாவது: * அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்கிறேன். * பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன். * அமைதியான முறையில் அதிகார பகிர்வை டொனால்டு டிரம்ப் கையாள வேண்டும். * சில நேரங்களில் நாம் சண்டையிடும் போது, வெற்றி பெற சிறிது நேரம் ஆகும். * ஆனால் நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

ஒளி வீசும் நட்சத்திரங்களாக இருப்போம்!

சமூகவலைதளத்தில் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள பதிவில்,' நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை, நாட்டின் மீது காட்டிய நேசம், மன உறுதி ஆகியவற்றுக்கு என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவானது, நாம் விரும்பாத ஒன்றாக இருக்கலாம்; நமது போராட்டம் பலனின்றி போயிருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் நம்பிக்கை ஒளி எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். இருளாக இருக்கும் போது தான் நட்சத்திரங்களை காண முடியும் என்று கூறுவார்கள். நாம் இப்போது ஒரு இருண்ட காலத்துக்கு செல்கிறோம் என்று பலரும் வருத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி நடக்காது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அப்படி இருந்தால், பிரகாசமாக ஒளி வீசும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களாக இருந்து வானத்தை ஒளிரச் செய்வோம். தோல்வி அடைந்திருக்கும் இந்த நேரத்தில், உண்மையும் நம்பிக்கையும் நமக்கு வழிகாட்டும் என்று நம்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Lion Drsekar
நவ 07, 2024 15:14

எட்டிமரம் காயாதிருந்தேன்ன காய்துபயனென்ன என்ற பாடல் நினைவுக்கு வருகிறது, வந்தே மாதரம்


வலியவன்
நவ 07, 2024 13:34

ஏன்டா இவ்ளோ கேவலமாக இருக்காங்க. தமிழனாக இல்லாத எந்த தற்குரியும் இங்கு கருத்து போட தகுதி இல்லை


Durai Kuppusami
நவ 07, 2024 10:51

ஏன் கருத்து எழுதுபவர்கள் எல்லோரும் கமலாவுக்கு எதிராகவே இருக்கிறார்கள். அவர் பிறப்பால் தமிழரான இந்தியர்.. பல காரணங்களுக்காக அமெரிக்கா சென்றார்.முன்னேற்றம் கண்டு மணம் முடித்து அமெரிக்காவின் குடியுரிமை பெற்றார்.துணை அதிபராகவும் ஆனார். இங்கே ஒன்று கவனிக்கவும்..நம்மூரில் இருந்து பிழைக்க அமெரிக்கா போய் அந்த நாட்டின் குடியுரிமையை பெற்று... இந்திய குடியுரிமை இழந்து பெற்ற தாய் தந்தை மறந்து அங்கே இருப்பதே பெருமை என்று ... பேசும் எத்தனையோ குடும்பங்கள் தாய் தந்தை இறந்தாலும் அவர்கள் இறுதி சடங்கை காணொளி மூலம் பார்க்கும் அன்னிய மூடர்கள்.....கமலாவை பற்றி இங்கிருக்கும் அறிவீலிகள் கருத்து எழுத யோக்கியதை அற்றவர்கள்.......


Ganesh Subbarao
நவ 12, 2024 12:20

கமலா அவர்கள் தமிழ் வம்சமாக இருந்தாலும் மனதால் அமெரிக்கர். கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டவர். இந்தியர்களை பற்றி அவருக்கு யாதொரு அக்கறையும் இல்லை. இடதுசாரி சிந்தனாவாதி. இந்தியா வளருவத்தில் விருப்பமில்லாதவர்


வைகுண்டேஸ்வரன்
நவ 07, 2024 10:11

"தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த துணை அதிபர் கமலா ஹாரிஸ்,"- இவரு என்ன பைத்தியமா?? இவரு ஏற்றுக் கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன? கிளம்புமா, ரீல் அந்து போச்சு கிளம்பு


VENKATASUBRAMANIAN
நவ 07, 2024 08:08

டிராமா முடிந்தது விட்டது இனிமேல் ஒப்புக்கொண்டு ஆகவேண்டும்.


Barakat Ali
நவ 07, 2024 07:30

தோத்துட்டாலும் மக்களுக்காக போராடுவேன் ன்னு சொல்லாத அரசியல்வாதியே இல்லிங்கோ .....


SUBBU,MADURAI
நவ 07, 2024 07:12

ஏன் இவர் தோல்வியை ஒத்துக் கொள்ளாவிட்டால் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்க முடியாமல் போய் விடுமா? ஏற்கனவே அமெரிக்க அதிபராக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்புக்கு இவரையும், பைடனையும் விட நன்றாக ஆட்சி நடத்த தெரியும் எனவே இந்த அம்மையார் ட்ரம்புக்கு எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என புத்திமதி சொல்லத் தேவையில்லை. கடந்த நான்கு வருடங்களாக அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவி வகித்த கமலா ஹாரிஸ் நம் இந்திய நாட்டிற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை மாறாக அதிபர் பிடனுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவில் குற்றவாளி என்று அறிவிக்கப் பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஒருவனை தன் நாட்டில் வைத்துக் கொண்டு அவனுக்காக கனடாவுடன் சேர்ந்து மறைமுகமாக தனது CIA துறையை தூண்டி விட்டும் Five Eyes என அழைக்கப் படும் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு உலக அரங்கில் இந்தியாவை குற்றவாளி போல் சித்தரித்து பல அவதூறுகளை இவரும், பைடனும் பரப்பினர் கடைசியாக நாம் ரஷ்யாவுக்கு ஆதரவு தருகிறோம் என்பதற்காக நம் நாட்டின் 19 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்தார். இதுபோல பல விஷயங்களில் அவர் இதுவரை இந்தியாவுக்கு எண்ணற்ற இன்னல்களை செய்துள்ளார். அவர் பெரும்பாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார் சுருக்கமாக சொன்னால் அவர் நம்முடைய முதுகில் குத்தும் தூரோகி. எனவே கமலா ஹாரிஸ் தோற்று ட்ரம்ப் அதிபரானது நம் பாரதத்துக்கு நன்மைதான்.


chennai sivakumar
நவ 07, 2024 10:13

இந்த செய்தி தெரியாமல் கமலா வெற்றி பெற யாகம் நடத்துகிறார்கள். இவர்கள்தான் தேச துரோகிகள்


Svs Yaadum oore
நவ 07, 2024 07:10

பெண்களின் உரிமைகளுக்காக இவர் தொடர்ந்து போராடுவாராம் ....விடியல் வானவில் பெண்கள் உரிமை என்று கலாச்சார சீரழிவை இங்கே ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நடு ரோட்டில் ஆணும் பெண்ணும் ஆடுவது போலவா?? .....விடியல் அமெரிக்க தி மு க வுக்கு முட்டு கொடுப்பது ஏன் என்று காரணம் அறிந்ததே ...


Anvar
நவ 07, 2024 08:06

நம்ம ஊரு கமலா ஹாரிஸ் "கனி அக்கா " மாதிரி


Svs Yaadum oore
நவ 07, 2024 07:06

இந்த விடியா திராவிடனுங்க முக ராசி கை ராசி ....விடியல் அமெரிக்காவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போன போதே முடிவு தெரிந்ததுதான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை