உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்களில் கராச்சிக்கு 2வது இடம்

சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்களில் கராச்சிக்கு 2வது இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான நகரங்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் 3 நகரங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. அது பாகிஸ்தானின் கராச்சி 2வது இடத்தில் உள்ளது.குற்றச்செயல்கள், வன்முறை, பயங்கரவாத அச்சுறுத்தல், இயற்கை பேரிடர்கள், பொருளாதார சீர்குலைவு ஆகியவற்றால், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, ஆபத்தான 3 நகரங்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது.100 புள்ளிகள் அடிப்படையாக வைத்து வெளியிட்ட பட்டியலில், வெனிசுலாவின் கராகஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்நகர் 100 புள்ளிகளை பெற்றுள்ளது. 93.12 புள்ளிகளுடன் கராச்சி நகரம் 2வது இடத்தில் உள்ளது.3வது இடத்தில் மியான்மர் தலைநகர் யாங்கூன் 91.67 புள்ளிகளுடன் உள்ளது. இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டு உள்ளது. கராச்சி செல்பவர்கள், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
ஜூலை 27, 2024 17:10

போர்கிஸ்தானில் உள்ள எல்லா நகரங்களும் மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மை பேசும் அறிவீலிகளை அங்கு அனுப்பவேண்டும்.


R Kay
ஜூலை 27, 2024 15:09

இதுவல்லவோ அமைதி மார்க்கம்


R S BALA
ஜூலை 27, 2024 13:34

ஆப்ரிக்க காடுகளுக்கு அமேசான் காடுகளுக்கும் மனிதன் பயமின்றி சென்று வரலாம்..


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி