வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்னும் பாகிஸ்தான் 50 ஆண்டுகள் பின்னோக்கி தான் இருக்கு அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி இல்லை வேலை வேலை
இந்தியாவின் தாக்குதல் தொடரும் என்று அங்கே முதலீட்டாளர்கள் நினைத்திருக்கலாம் ....
இஸ்லாமாபாத்; இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பஹல்காம் சுற்றுலா பயணிகள் 26 பேரின் மரணத்துக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ தாக்குதல் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானுக்கும், அந்நாடு ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் இந்தியா பாடம் புகட்டி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aqpuw3t4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மே 7 நள்ளிரவில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. ராணுவத்தின் இந்த அதிரடியால் இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் காணப்பட்ட அதே தருணத்தில், பாகிஸ்தானில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. கராச்சி பங்குச்சந்தையான கே.எஸ்.இ. (KSE 100).குறியீடு ஆரம்ப வர்த்தகம் 6.272 புள்ளிகள் சரிந்து 107, 007.68 ஆக சரிந்தது. நேற்றைய தினம் இதே பங்குச் சந்தை 113,568.51 என்ற புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தது. வங்கிகள், தொழில்துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் கராச்சி பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு காணப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல்களை புது டில்லியில் இருந்தபடியே வெளியிட்ட அடுத்த தருணமே பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பாகிஸ்தான் 50 ஆண்டுகள் பின்னோக்கி தான் இருக்கு அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி இல்லை வேலை வேலை
இந்தியாவின் தாக்குதல் தொடரும் என்று அங்கே முதலீட்டாளர்கள் நினைத்திருக்கலாம் ....