உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உயிருடன் இருக்கிறார் இலியாஸ் காஷ்மீரி : "டான் தகவல்

உயிருடன் இருக்கிறார் இலியாஸ் காஷ்மீரி : "டான் தகவல்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் இறந்து விட்டதாக நம்பப்பட்ட அல்- குவைதா கமாண்டர் முகம்மது இலியாஸ் காஷ்மீரி, உயிருடன் இருப்பதாக 'டான்' பத்திரிகையின் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு வாசீரிஸ்தான் பகுதியில், சமீபத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், அல்- குவைதா கமாண்டரும், அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளில் ஒருவருமான இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இச்செய்தியை அமெரிக்காவோ, பாகிஸ்தானோ இதுவரை உறுதி செய்யவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் காஷ்மீரி உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாக, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் 'டான்' பத்திரிகைக்கான இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. யார் இத்தகவலை கூறினர் என்பது அச்செய்தியில் கூறப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை