உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது: விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்

கொழும்பு: 'கச்சத் தீவு, இலங்கைக்கு சொந்தமானது. தமிழகத்தில் தேர்தல் நேரங்களில், கச்சத்தீவு பற்றி பேசுவதை, அரசியல் தலைவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்,' என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தயாராகி வருகிறார். இதற்காக, கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை கடந்த 21ல், மதுரையில் நடத்தினார். அதில் பேசிய விஜய், 'தமிழக மீனவர்கள் 800 பேர், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க, பிரதமர் மோடியும் மத்திய அரசும் தவறி விட்டது. தமிழக மீனவர்களின் நிரந்தர பாதுகாப்புக்கு, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே தீர்வு,' என கூறினார்.இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜயின் இந்த பேச்சுக்கு, பதிலளிக்கும் விதமாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியதாவது:கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமான தீவு. இந்த நிலை, ஒருபோதும் மாறாது; எதிர்காலத்திலும், இலங்கைக்கு சொந்தமானதாகவே கச்சத்தீவு இருக்கும். தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் நடைபெறும் நேரங்களில் எல்லாம், ஓட்டுகளை பெறுவதற்காக, அங்குள்ள அரசியல் கட்சியினர், இதுபோன்று பேசுவதும், அறிக்கை விடுவதும் வழக்கம். இது முதல் முறை அல்ல; கடந்த காலங்களில் கூட, தேர்தல் பிரசார மேடைகளில் இதுபோன்று பலர் பேசி உள்ளனர். எனவே, விஜயின் பேச்சை பொருட்படுத்த தேவையில்லை. இந்த விஷயத்தில், துாதரக ரீதியிலான கருத்துகள் மட்டுமே முக்கியம். இந்திய அரசிடம் இருந்தோ, துாதர்களிடம் இருந்தோ, கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றிய எந்த கருத்தும் வரவில்லை. மேலும், இந்திய தரப்பில் இருந்து, துாதரக ரீதியாக, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

SP
ஆக 29, 2025 12:22

இதெல்லாம் தமிழக அரசியலின் சாபம் இன்னும் என்னென்ன கேவலங்களை சந்திக்க வேண்டி வருமோ?


surya krishna
ஆக 29, 2025 09:13

அணில் குஞ்சு இந்த அவமானம் உனக்கு தேவையா! எல்லாம் சரி அது என்ன புது அக்கறை இஸ்லாமியர்கள் மேல உனக்கு, இந்தியாவுல இருக்கிற இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் உள்ள இஸ்லாமியயர்களை விட நல்ல சுதந்திரமா சந்தோசமா வசதி வாய்ப்போட இருக்காங்க அது உனக்கு தெரியுமா? சில்ற பயலே! இஸ்லாமிய மேல உனக்கு பெரிய அக்கறையோ எதுக்குன்னா ஆட்டுமந்தை போல சிறுபான்மையினர் ஓட்டு போடுவார்கள் என்று அந்த ஓட்டு பிச்சை எடுக்குறதுக்கு இப்பவே பாத்திரம் எடுத்துட்டு கிளம்பிட்டியா?


surya krishna
ஆக 29, 2025 08:52

பொடிபையன் விஜய் ஜோசப், திமுக செய்ற அரசியலைதான் இவனும் செய்கிறான் ஆனா கொடுத்தது திமுககாரன்தான் இவனுக்கு தெரியலையா? அறிவுள்ளவன் நல்ல அரசியல் செய்வான் இவன் செய்றது சில்லறை அரசியல்.


Whistle Blower
ஆக 29, 2025 04:52

கச்சத்தீவு யாரால் தாரை வார்க்கபட்டது என்பதை பற்றி விஜய் வாய் திறக்கவில்லை. இப்போது புரிகிறது இவர் யாருடைய B Team என்பது.


தாமரை மலர்கிறது
ஆக 29, 2025 01:51

கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவார்த்துவிட்டது. அவ்வளவுதான். வெறுமனே தமிழக அரசியல்வாதிகள் வெற்றுஅரசியல் பேசி வருகிறார்கள். ஏன் இலங்கையை மட்டும் கேட்கிறீர்கள்? அப்படியே இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவும் வேணும் என்று விஜய் சொல்ல வேண்டியது தானே. குறைஞ்சா போயுடுவிங்க.?


பேசும் தமிழன்
ஆக 29, 2025 00:09

ஏம்பா ஜோசப் விஜய்.... கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்தது யார் என்று உனக்கு தெரியுமா..... நீ யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று துடித்து கொண்டு இருக்கிறாயோ.... அந்த பப்பு வின் பாட்டி இந்திரா அவர்கள் தான்.... அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..... அப்போது அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடந்தையாக இருந்தது..... இண்டி கூட்டணி திமுக தான்.


Kulandai kannan
ஆக 28, 2025 23:04

இதுவரை ஸ்டாலின், சீமான் வகையறாக்களுக்கு பதில் சொல்லாத இலங்கை, விஜய்க்கு பதிலளிக்கிறதென்றால் வாடிகன் திருவிளையாடல்தான்.


Amar Akbar Antony
ஆக 28, 2025 22:54

சார் சின்னப்பையன் சார் பெரியமனசுவச்சு விட்டுருங்க சார்.


Raj S
ஆக 28, 2025 22:49

நாம குடுத்த கட்ச தீவை மீட்கணும்னா, நம்ம மக்களை காசுக்காகவும், மிரட்டியும், ஏமாத்தியும் மதம் மாற்றியவர்களையும் நாம் மீட்கணும்னுதான... அதுக்கு திருட்டு திராவிடனும், இந்த தற்குறியும் என்ன சொல்றாங்கன்னு கேட்டு சொல்லுங்க


Anand
ஆக 28, 2025 22:45

அதிக பிரசங்கி , நாட்டின் பிரதமர் என்ற நெனப்பு ஏலே நீ அடுத்த வருஷம் ஆடி நடுங்கிகிடுவே


முக்கிய வீடியோ