உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கோல்கட்டா பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் , சி.பி.ஐ., நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் டாக்டரின் உடல், கடந்த ஆக.9 ம் தேதி கருத்தரங்கக் கூடத்தில் கண்டெடுக்கப்பட்டது.விசாரணையில், பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. நாட்டை அதிர வைத்த இச்சம்பவத்தில் அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் 45 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், குற்றவாளி சஞ்சய் ராய் மீதும் முன்னாள் மருத்துவமனை முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோர் மீதும் நேற்று சி.பி..ஐ., குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
நவ 30, 2024 08:02

ஒருவர் மட்டுமே இந்தக் குற்றத்தைச் செய்திருக்க முடியாது ..... கொல்கத்தா போலீசின் விசாரணை முடிவை அப்படியே ஏற்றுள்ளது சிபிஐ ..... தவறான முன்னுதாரணம் ......


Kasimani Baskaran
நவ 30, 2024 06:28

மாநில விசாரணை அமைப்புக்கள் மற்றும் மாநில அரசு நிர்வாகமும் சேர்ந்து இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய எந்த அளவுக்கு முயன்றார்கள் என்பது நீதித்துறைக்கு தெரியும் - இருந்தும் வேண்டுமென்றே சொதப்பியது பெண்ணினத்தின் மீதான வெறுப்பாகக்கூட இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை