உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 10 வயது இந்திய வம்சாவளி சிறுவனின் அசாத்திய ‛‛ஐக்யூ: ஐன்ஸ்டீனை விட அறிவு அதிகமாம்!

10 வயது இந்திய வம்சாவளி சிறுவனின் அசாத்திய ‛‛ஐக்யூ: ஐன்ஸ்டீனை விட அறிவு அதிகமாம்!

லண்டன்: இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோரா, 10 வயதில், அறிவியல் மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் நுண்ணறிவு திறனை (ஐ.க்யூ) விட அதிகம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.அறிவியல் மேதைகளாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் (ஐ.க்யூ) அளவீட்டு எண் 160 ஆக இருக்கும். இதனை மிஞ்சும் விதமாக பிரிட்டன் நாட்டின் மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயதே ஆன இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் சிறுவன் கிரிஷ் அரோராவின், ஐ.க்யூ., அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.இவ்வளவு ஐ.க்யூ அளவீட்டை பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக கிரிஷ் அரோரா கூறுகையில், ''ஐ.க்யூ தேர்வுகளில் நடத்தப்பட்ட 11க்கும் மேற்பட்ட தேர்வுகள் எளிதாக இருந்தன. புதிய பள்ளியில் சேர்ந்து படிக்க ஆர்வமாக இருக்கிறது. அங்கு எனக்கேற்ற பாடங்கள் இருக்கும் என நம்புகிறேன்.எனக்கு ஆரம்பப் பள்ளி சலிப்பாக இருக்கிறது. அங்கு நாள் முழுக்க எளிமையான கணக்கு அல்லது சும்மா ஒரு பத்தி (பாரா) மட்டும் எழுதச் சொல்கிறார்கள். அது போர் அடிக்கிறது. எனக்கு அல்ஜீப்ராவில் தான் அதிக விருப்பம். புதிய பள்ளியில் அதைச் செய்ய முடியும் என நம்புகிறேன்'' என்றார்.

இசையிலும் 'கில்லி'

கிரிஷ் அரோரா, படிப்பு மட்டுமல்லாமல் இசையிலும் அலாதி பிரியமாக இருந்துள்ளார். வெறும் 6 மாதங்களில் நான்கு கிரேடுகளை முடித்து, டிரினிட்டி இசைக் கல்லூரியின் 'ஹால் ஆப் பேம்'ல் இடம் பிடித்துள்ளார். தற்போது பியானோவில் 7 கிரேடுகளை முடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kalyanasundaram
டிச 03, 2024 18:02

IN INDIA INTELLEGENCE WILL NOT PLAY A GOOD PART. BUT CASTE ALONE PLAY A VERY GREAT PART


R S BALA
டிச 03, 2024 17:46

அறிவாளிகள் மட்டுமே படிக்கும் படிக்கும்...


Suppan
டிச 03, 2024 16:20

அந்தப்பையன் சரியான உயர்தரமான பள்ளியில் படிப்பதுதான் அவனுக்கும் நல்லது . மற்ற பிள்ளைகளுக்கும் நல்லது.


Kumar Kumzi
டிச 03, 2024 14:10

நம்பிள் டாஸ்மாக் கூமுட்டைகளுக்கு துண்டுசீட்ட வாசிக்க தெரிஞ்சாலே பெரிய விஷயம்


Barakat Ali
டிச 03, 2024 13:50

வாசகர்களின் ஐ க்யூ வையும் பரிசோதிக்க ஏற்பாடு செய்யணும் .....


sridhar
டிச 03, 2024 13:34

அமெரிக்க இங்கிலாந்தில் கலக்குபவர்கள் இந்திய சீன குழந்தைகளே . நம் நாட்டில் ஜாதி சீண்டல் அதிகம் .


பாரதி
டிச 03, 2024 12:59

இந்திய ரத்தத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க உயர்க


Madras Madra
டிச 03, 2024 12:53

மனித குல சாபங்களாக விளங்கும் பல அறிவியல் கண்டு பிடிப்புகளின் தீமைகளை பிளாஸ்டிக் , அணு வெடிப்பு , பல அறிவியல் கழிவுகள் சரி செய்யும் தீர்வுகளை கண்டறிவாய் தம்பி வாழ்த்துக்கள்


ராமகிருஷ்ணன்
டிச 03, 2024 12:50

இந்த மாதிரியான செய்திகளை திராவிட, சொறியான்கள் கவனிக்க வேண்டும். இவரின் பெருமையில் பிராமண எதிர்பாளர்களுக்கும் பங்கு உண்டு. சொறியான்கள் பிராமண எதிர்ப்பு எடுக்க வில்லை என்றால் இந்த பையன் இந்தியாவில் ஏதாவது கோயிலில் மணி அடித்து கொண்டு இருப்பான்.


S Regurathi Pandian
டிச 03, 2024 12:19

ஒரு மிகப்பெரிய மேதையோடு மற்றவர்களை ஒப்பிடுவது சரியான செயலல்ல. அந்த சிறுவனின் திறமை பிற்காலத்தில் சமுதாயத்திற்கு எந்த அளவு பலன் தருமோ அதைப்பொறுத்துத்தான் அளவிட வேண்டும்


Barakat Ali
டிச 03, 2024 19:25

ஐ க்யூ என்பது வயதாக ஆக வளராது ......


முக்கிய வீடியோ