உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத்: ''குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம், இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர்,'' என பிரதமர் மோடி பேசினார்.அரசு முறை பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.இதனைத் தொடர்ந்து குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ' ஹாலா மோடி' என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: குவைத் வந்ததில் இருந்து அரவணைப்பை என்னால் உணர முடிந்தது. இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு நான்கு மணி நேரங்களே ஆகும். ஆனால், இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவதற்கு நான்கு தசாப்தம் ஆகி உள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளீர்கள். இங்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது, மினிஇந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இங்கு வருகின்றனர்.இந்திய வம்சாவளி டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், குவைத் மருத்துவ உள்கட்டமைப்பின் பெரிய பலமாக உள்ளனர். இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் இந்திய ஆசிரியர்கள் உதவுகின்றனர்.குவைத் தலைவர்களிடம் பேசும்போது, அவர்கள் இந்திய சமூகத்தினரை புகழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறன் ஆகியவற்றை பார்த்து குவைத் குடிமக்கள் உங்கள் மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் ' உலக தியான தினம்' கொண்டாடப்படுகிறது. இது இந்திய பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.Galleryவர்த்தகம் மற்றும் புதுமைகள் மூலம் ஊக்கத்தை தூண்டும் பொருளாதாரத்தை விரும்புகிறது. இந்தியாவும் புதுமையிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய குவைத்திற்கு தேவையான திறன், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வளம் இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

J.V. Iyer
டிச 22, 2024 04:48

இங்கு இருக்கும் செக்குலரிஸ்ட்களை ஒழித்தால், எல்லா ஹிந்துஸ்தானியர்களும் நல்லவர்களே.


Raj
டிச 21, 2024 23:49

எப்படி புகழ்கிறார்கள் தெரியவில்லை, 700 கோடியை அடித்து சென்ற இந்தியர்களையா .... கேவலம்டா.....


Barakat Ali
டிச 21, 2024 21:30

யாரை புகழுறாங்க ???? பணத்தைக் கொள்ளையடித்து வந்த சேட்டன்மாரையா ????


veera
டிச 22, 2024 05:44

Medan நாட்டிலும் திருடர்கள் இருக்கிறார்கள்.....கருத்தும் போடுகிறார்கள்


அப்பாவி
டிச 21, 2024 20:44

சில சேட்டன்/சேச்சி மார்கள் குவைத்தில் கடன் வாங்கிட்டு டிமிக்கி குடுத்துட்டு வந்த கதை தெரியுமா?


vivek
டிச 21, 2024 21:55

அறிவிலி அப்பாவி


jkvasan Kuwait
டிச 21, 2024 20:26

welcome Sir..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை