உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியாவில் நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்த பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஜாவா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்தனர். 8 பேரைக் காணவில்லை.ஜாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள பெக்கலோங்கன் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் வந்து நிலச்சரிவை ஏற்படுத்தியது. அதில், அங்கிருந்த வீடுகளில் மண்ணில் புதைந்தன. இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேரை காணவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5arptc3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த பாலம் ஒன்று நொறுங்கி விழுந்தது. இதனால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். அங்கு வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை பாதிக்கப்படக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஷாலினி
ஜன 21, 2025 21:36

இயற்கையை யாரும் வெல்ல முடியாது.


ஆனந்த்
ஜன 21, 2025 21:35

வயநாட்டை போல், அங்கும் மக்கள் சிக்கிக் கொண்ட அவலம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.


சமீபத்திய செய்தி