உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்; உலக வங்கி நிபுணர் கருத்து

மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்; உலக வங்கி நிபுணர் கருத்து

புதுடில்லி: சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளின் பாதிப்பை, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை தான் குறைத்து விடுவதாக, உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் ஆரேலியன் க்ரூஸ் தெரிவித்துள்ளார்.இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வையே அதிகம் சார்ந்திருப்பதாகவும், ஏற்றுமதியை அதிகம் நம்பியில்லை என்ற பொருள்படும் வகையில் ஆரேலியன் க்ரூஸ் பேசியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் உள்நாட்டு சந்தை ஏற்கனவே மிகப் பெரியது. எனவே, சர்வதேச நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை இது குறைத்து விடுகிறது. உழைக்கும் வயதிலான மக்கள்தொகை போன்ற காரணிகள், வரும் தசாப்தங்களில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.வரும் 2050 வரை, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். இது விலை மதிப்பற்ற சொத்தாக விளங்குவதோடு, அதீத வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச அளவில், வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும். இதை பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் தொடர்ந்து கூறி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.30 முதல் 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திறன் வாய்ந்த பொருளாதாரமாக விளங்குவதால், வளர்ச்சி 6 சதவீதத்துக்கு கீழ் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Palanisamy T
நவ 15, 2025 10:11

உலக வங்கி நிபுணர் தேவையான நம்பிக்கையான கருத்தைக் கூறிவிட்டார். இதுவொன்றுப் போதும். மிகப்பெரிய உள்நாட்டு சந்தை மேலும் எந்நேரமும் தயார்நிலையில் இருக்கும் தேவையான உழைக்கும் மக்களின் கரங்கள் இவை யிரண்டையும் தமிழக அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். என்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டு சந்தையும் வெளிநாட்டு சந்தையும் அவசியம் தேவை.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 13, 2025 16:09

2050 வரை, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் ...... அவுங்களை போதை ஜிஹாத் கும்பல் அடிமைப்படுத்தி வருகிறது .....


RAMESH KUMAR R V
நவ 13, 2025 14:17

தேசப்பற்று என்கின்ற உன்னத சக்தி வளர்ப்போம் நாம்


அப்பாவி
நவ 13, 2025 12:36

வல்லரசு ஆகணும்னா எல்லாத்தையும் செஞ்சாகணும்.


vbs manian
நவ 13, 2025 12:34

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.


அப்பாவி
நவ 13, 2025 10:39

பாஞ்சி லட்சம் போட்டா போட்டி போட்டுகுட்டு பொருள் வாங்குவோமே


Ramesh Trichy
நவ 13, 2025 11:42

உழைத்து சம்பாதிக்க வழியை பார்க்கவும், அப்படி முடியவில்லை என்றால் விடியா உரிமை தொகைக்கு அப்ளை செய்யவும்.


SUBBU,MADURAI
நவ 13, 2025 12:16

உனக்கெல்லாம் வீட்டில் எப்படித்தான் கஞ்சி ஊற்றுகிறார்களோ தெரியல எதுக்கெடுத்தாலும் நக்கல் நையாண்டிதானா? சொந்தமாக ஒரு கருத்தை கூட போட மாட்டியா


KRISHNAN R
நவ 13, 2025 10:18

இந்த சந்தை மீது குறி வைத்து தான் அமெரிக்க மற்றும் சீன நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு காக்க வேண்டும் . ஐரோப்பிய நாடுகளில் பரஸ்பர வர்த்தக முறை மாற்றாக உதவலாம்.


sundarsvpr
நவ 13, 2025 09:32

நேர்மையான பரிவர்த்தனை நிம்மதியாய் இருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. அறுபது ஆண்டுகளுக்கு முன் கீரைக்காரி கீரை விற்பாள். முறத்தில் அரசி வைப்பார்கள் அரசியை டுத்துக்கொண்டு கீரை வைப்பார்கள். இரண்டும் நேர்மையாய் நடைபெறும் சுத்தமாய் இருக்கும். இது அரசுகளுக்கு படிப்பினை. பாரத நாடு ஆன்மிக பற்றுள்ள நாடு. இதில் தாழ்ந்துபோனால் நாடு மட்டும் நிர்வாகம் மட்டும் கீழ் நிலை அடையும் என்பதில்லை மக்களும் அடைவார்கள்.


சமீபத்திய செய்தி