உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லஷ்கர் ஆதரவாளராக இருந்தவருக்கு டிரம்ப் நிர்வாகத்தில் பதவி

லஷ்கர் ஆதரவாளராக இருந்தவருக்கு டிரம்ப் நிர்வாகத்தில் பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஒரு காலத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு ஆதரவாளராக இருந்ததுடன், அதில் இணைந்து பயற்சி பெற்றவரை அமெரிக்காவில் மத சுதந்திர கமிஷனுக்கான வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ள நிலையில், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.யார் இவர்கடந்த 2000 ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த பயங்கரவாத அமைப்பு தான் 2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான அமைப்பு ஆகும்.2003 ல், இவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்த புகாரின் கீழ் கடந்த 2004 ம் ஆண்டு, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 13 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் 2017 ம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதனை ஆதரித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு அவர் வேறு பாதையில் பயணிக்க துவங்கிவிட்டார். பிரிவினைக்கு எதிராகபணியாற்றியதுடன், அமைதி முறையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவித்தார். மத நம்பிக்கை புரிதலுக்கான பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதுடன், மதம் குறித்த ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.கேள்விஇந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்திவிட்டதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. தற்போது ராயர் நியமனம் மூலம் உலகிற்கு அமெரிக்கா என்ன சொல்ல விரும்புகிறது. உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில்இருந்து அமெரிக்கா பின்வாங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nathan
மே 19, 2025 15:02

அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதை இந்தியா தவிர்க்க வேண்டும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட MQ9 reaper ஆளில்லா விமானம் தரம் படு மோசம் தயவு செய்து ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்தியர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை அமெரிக்காவிற்கு தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்


Karthik
மே 19, 2025 09:46

இந்த அமெரிக்கா உலக நாடுகள் அனைத்திலும் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி பாதுகாத்து பராமரித்து வருகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை எந்த நாடு அல்லது அரசு எடுத்தாலும் அப்போது அமெரிக்காவுக்காக இந்த ஸ்லீப்பர் செல்கள் செயல்படும்.


சந்திரசேகர்
மே 19, 2025 09:46

இதில் ரகசியம் ஒன்றும் மில்லை.இவனை வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பணம் மற்றும் ஆயுதம் சப்ளை செய்யத்தான்


sureshpramanathan
மே 19, 2025 07:14

Trump seemed more dangerous than Biden and gang Why use such people in White House endangering USA National Security as well Global security Something is wrong in USA admin


Gnana Subramani
மே 18, 2025 22:39

ஜீ தன்னுடைய அன்பு நண்பர் டிரம்புக்கு ஒரு போன் பண்ணினால் போதும் இந்த ஆளை தூக்கி விடுவார்


sankaranarayanan
மே 18, 2025 21:35

டிரம்மில் காலை சுற்றிய பாம்பு டிரம்பையே சும்மா விடாது சமயம் பார்த்து தீர்த்துவிடும் டிரம்பு ஒரு ஏமார்ந்த சோனாகிரி ஆகிவிடுவார் விரைவில் எதிர்பார்க்கலாம்


உண்மை கசக்கும்
மே 18, 2025 21:29

சரியான துக்ளக் , இந்த டிரம்ப்


Sri Sri
மே 18, 2025 21:24

கெடுவான் கேடு நினைப்பான்


HoneyBee
மே 18, 2025 21:20

கட்டுரையில் எங்க அவர் பெயர். யார் அவர் என்று கூட பதிவு இல்லை. பயங்கரவாதியாக பணியாற்றினார் என்று மட்டும் உள்ளது


Rathna
மே 18, 2025 21:12

ஒரு நாளைக்கு ஒரு பேச்சு, ஒரு செயல் என்று கொண்டவரை அமெரிக்கா ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்து உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை