உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தினமும் கட்டாயம் சிரிங்க.. : ஜப்பானில் உத்தரவு

தினமும் கட்டாயம் சிரிங்க.. : ஜப்பானில் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து சிரிப்பு பாதுகாக்கிறது என்ற ஆய்வின் அடிப்படையில் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை சிரிப்பு தினமாக மக்கள் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.சிரிப்பு என்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அது பற்றி ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு உதவுவதை உறுதிப்படுத்தியது. அதன்படி, யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அருண்
ஜூலை 12, 2024 21:30

ஒரு சிலர் எங்கே நம்ம விடியல் சார் பற்றி சொல்லிடுவாங்கோ என்று முந்திக்கிட்டு கருத்து போடுகிறார்கள் நான் முத்துவை சொல்லவில்லை


யுவராஜ்
ஜூலை 12, 2024 21:23

நம்ம ஜப்பான் விடியல் முதல்வர் பேச்சை கேட்டாலே போதுமே சிரிக்க இதுக்கு எதுக்கு தனி சட்டம்


Narayanan Muthu
ஜூலை 12, 2024 18:36

அது மாதிரியான உத்தரவெல்லாம் எங்களுக்கு தேவையே இல்லை. இங்குள்ள பாஜகவினர் மற்றும் அவர்களின் அடிப்பொடி தொண்டர்களின் தினசரி பேச்சும் நடவடிக்கைகளும் எங்களுக்கு கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துவிடும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ