உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத அமைப்பு பட்டியலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்: கனடா அறிவிப்பு

பயங்கரவாத அமைப்பு பட்டியலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்: கனடா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கிய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை, பயங்கரவாத அமைப்பு பட்டியலில் உள்ளதாக கனடா அரசு இன்று அறிவித்துள்ளது.பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். இவனது அடியாட்கள், இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கனடாவில், இவர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் உள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு நீண்ட காலமாக கனடா அரசை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கனடாவின் பிரதிநிதி நத்தலி ட்ரூயின் ஆகியோர் புதுடில்லியில் கடந்த வாரம் சந்தித்து பேசினர்.விரிவான பேச்சு நடத்திய நிலையில் தற்போது கனடா அரசு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.இது குறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு கனடாவில் இடமில்லை, குறிப்பாக குறிப்பிட்ட சமூகங்களை குறிவைத்து பயம் மற்றும் மிரட்டல் சூழலை உருவாக்குபவர்களுக்கு இங்கு இடம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை