உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் முதன்முறையாக நியூயார்க்கில் தீபாவளிக்கு விட்டாச்சு லீவு !

அமெரிக்காவில் முதன்முறையாக நியூயார்க்கில் தீபாவளிக்கு விட்டாச்சு லீவு !

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: தீபாவளியை அதிகாரப்பூர்வ பள்ளி விடுமுறையாக அறிவித்து நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து தீபாவளிக்கு விடுமுறை அறிவித்த அமெரிக்காவின் ஒரே நகரம் நியூயார்க் என்று வரலாற்று பெருமையை பெற்றுள்ளது.நியூயார்க் நகரில் கடந்த 25,ம் தேதி நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லமான கிரேசி மேன்ஷனில் தீபாவளி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார், நியூயார்க் தமிழ்ச் சங்கம், அதன் நிர்வாகக் குழு மற்றும் பல்வேறு முக்கிய இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் 'தீபாவளி என்பது மகிழ்ச்சி, பிரதிபலிப்பு மற்றும் ஒற்றுமைக்கான நேரம், அதை இங்கே கிரேசி மேன்ஷனில் இந்திய சமூகத்தின் தலைவர்களுடன் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன்' என்ற மேயர் ' தீபாவளி அன்ற பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். தீபாவளியை பள்ளி விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த நாட்டின் முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றுள்ளது. எங்கள் பெரிய நகரத்தில் அனைத்து சமூகங்களும் பார்க்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும், கொண்டாடப்படுவதையும் உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. என்றார்.

மேயரின் அறிவிப்பை வரவேற்ற நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் கதிர்வேல் குமாரராஜா, கூறுகையில் : மேயரின்நடவடிககை மற்றும் தீபாவளியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நகரின் முற்போக்கு நிலைப்பாட்டிற்கும் நன்றி. 'பல தமிழ் குடும்பங்களுக்கு, தீபாவளி என்பது ஆண்டின் முக்கியமான நேரம்.இது சமூக ஒற்றுமை மற்றும் சந்திப்புகளின் பகிர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது, கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

selvi Kumar
அக் 29, 2024 19:07

Most of the New Jersey schools are getting holiday for Diwali from last 10 years. Few Pennsylvania schools too. New York is not the first state


Lion Drsekar
அக் 27, 2024 12:40

பாராட்டுக்கள் அதன் விளைவுதான் இங்கும் வாழ்த்துச்செய்தி வந்துள்ளது, வந்தே மாதரம்


சண்முகம்
அக் 27, 2024 01:19

எல்லோருக்கும் பொது விடுமுறை இல்லை. வேண்டுபவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆண்டு விடுப்பில் ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக இந்த மாதிரி விடுமுறையை இந்துக்கள் இங்கே ஏடுப்பதில்லை.


Balakumar V
அக் 26, 2024 23:27

பென்சில்வேனியா 1st


rama adhavan
அக் 26, 2024 23:25

ஆனால் இங்கோ ஆளுவோர் வாழ்த்து கூட சொல்வது இல்லை. என்ன மாதிரியோ மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை