உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் கோவில்களை தாக்குவோம்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

கனடாவில் கோவில்களை தாக்குவோம்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் உள்ள ஹிந்து கோவில்களில், நவம்பர் 16-17 தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளதாக, அந்த நாட்டு எம்.பி., சந்தன் ஆர்யா கூறியுள்ளார்.இது குறித்து எம்.பி., ஆர்யா கூறியதாவது:நவம்பர் 16ம் தேதி, மிசிசிஸ்சாவ்காவில் அமைந்துள்ள கலிபாரி கோவிலிலும், 17ம் தேதி பிராம்ப்டனில் உள்ள திரிவேனி கோவிலிலும் இந்திய துாதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குவோம், அயோத்தியின் அடித்தளத்தை அசைப்போம் என எனக்கு மிரட்டல் வந்துள்ளது. இப்பிரச்னையில் இந்திய தரப்பில் இருந்து பதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, எளிதாக எடுத்துக்கொண்டது இதற்கு காரணம் என்று அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், காலிஸ்தானி கொடியின் கீழ் சர்ரே காவல்துறை அதிகாரிகள் வாள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.இந்த வீடியோ குறித்து அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறியதாவது;காலிஸ்தானி இயக்கத்திற்கு, கனடா சர்ரே காவல்துறை வெளிப்படையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த ஆதாரங்கள் நிருபிக்கின்றன.இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது காவல்துறையின் பாரபட்சமற்ற தன்மை குறித்து கேள்வியை எழுப்புகிறது. காவல்துறையில் காலிஸ்தானிகள் நுழைந்துள்ளதாக எம்பி சந்தன் ஆர்யா கூறியதை இது நிரூபிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் வன்முறையில் ஈடுபட்ட காலிஸ்தானி கும்பல், வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஹிந்துக்களை தாக்குவதற்காக கார்களில் சென்றுள்ளனர். கனடா காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, புலம்பெயர்ந்த இந்தியர்கள், ஹிந்துக்கள் மற்றும் மிதவாத சீக்கியர்களுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளிப்பதையும் காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sundararajan
நவ 12, 2024 08:40

நம்ம ஊர் திராவிஷ , கான் கிராஸ்களின் மறு உருவம்


N.Purushothaman
நவ 12, 2024 06:32

வினை விதைத்தவன் வினை அறுப்பான் ....


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 05:33

இது தவறான நோக்கில் கனடாவை பார்க்கவைக்கிறது , கனடா அரசு நடவடிக்கை எடுக்காம இருந்தா அவர்களின் டெமாக்ரசி கேள்வி குறியாகிவிடும் என்பது கூட அறியாத முட்டாள்களா வெள்ளைக்காரனுவ , அந்த வெள்ளைக்காரனை நம்பி ஆஷ்துரையை கொண்டாடும் தமிழர்கள் எல்லாம்...


Nathan
நவ 11, 2024 23:09

.... செய்டா


Sree
நவ 11, 2024 23:00

இவன் வீரனும் இல்லை அரவான் பிறவி


Iniyan
நவ 11, 2024 22:13

இந்த கனடா திரவிடியா பயல் ட்ருடுவை தூக்கினால் எல்லாம் சரி ஆகி விடும்


Nandakumar Naidu.
நவ 11, 2024 23:00

இவனை கனடா அரசே என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். இரு நாட்டு உறவுகளை கெடுத்தவன் இவன். கனடாவிற்கு இந்த தீவிரவாதி வேண்டுமா இல்லை இந்தியாவுடன் நல்லுறவு வேண்டுமா? கனடா தீர்மானிக்கட்டும்.


Naga Subramanian
நவ 11, 2024 22:11

எமதர்ம இராஜரே, இந்த காலிப்பயலையும் கூடிய சீக்கிரம் வந்து, நிஜ்ஜாரை போல கூட்டிச் செல்லவும்.


Ganesh
நவ 11, 2024 22:10

சித்தப்பு உன்னைய மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம் ... நாங்க உன்னை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிச்சிக்கிறோம்..டி...


PRS
நவ 11, 2024 22:41

இவன் நம்ம ஊரு நக்கீரன் கோவாலு மாதிரி. வெறும் வெத்துவேட்டு பய.


Ramesh Sargam
நவ 11, 2024 21:54

பாகிஸ்தான் எப்படி தீவிரவாதிகளை வளர்த்து அழிந்து கொண்டு இருக்கிறதோ, அதுபோல் கனடா நாடும் அழியும் கூடிய சீக்கிரத்தில்.


சமீபத்திய செய்தி