வாழ்நாள் முழுதும் தடை!
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் முன்னாள் அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ், 72, மீதான ஊழல் வழக்கில், ஆறு ஆண்டு சிறை தண்டனையை அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், வாழ்நாள் முழுவதும், அரசு பொதுப் பதவியில் இருப்பதற்கும் தடை விதித்துள்ளது. கடந்த, 2007 முதல் 2015 வரை அதிபராக இருந்தபோது, அரசுப் பணிகளை, தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.