உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லிபுலேக் கணவாய் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது நேபாளம்

லிபுலேக் கணவாய் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது நேபாளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு:நம் நாட்டின் உத்தராகண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ள லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரியுள்ள நேபாள அரசு, அந்த எல்லையில் இந்தியா - சீனா இடையே வர்த்தக நடவடிக்கை நடைபெறக் கூடாது என கூறியுள்ளது.இந்தியா மற்றும் சீனா இடையேயான வர்த்தக உறவு மீண்டும் துவங்குகிறது. இதன்படி, மூன்று இடங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் கணவாயும் ஒன்று. இந்நிலையில், நம் அண்டை நாடான நேபாளம், லிபுலேக் கணவாய் தங்களுக்கு சொந்தமானது என, கூறியுள்ளது.இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லோக் பகதுார் சேத்ரி வெளியிட்ட அறிக்கையில், 'லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்தின் பிரிக்க முடியாத பகுதிகள். இவை, நேபாளத்தின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன' என்றார்.நேபாள அரசு, கடந்த 2020லும் இந்த பகுதிகளுக்கு உரிமை கோரியது. இந்த மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.இதில், லிபுலேக் கணவாய் அமைந்துள்ள மலைப்பகுதி சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத், நேபாளின் சுதுார் பச்சிம் மாகாணம் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தை இணைக்கும் புள்ளியாக உள்ளது.இந்த எல்லை வழியாக 1954ல் இருந்து, இந்தியா - சீனா இடையே வர்த்தகம் நடந்து வந்தது. அது, 2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா - இந்தியா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.சமீபத்தில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, லிபுலேக் உள்ளிட்ட எல்லைப் பகுதி வழியாக, இரு நாடுகளுக்கிடையே மீண்டும் வர்த்தகம் நடக்கும் என அறிவித்தார். இதையடுத்து, நேபாள வெளியுறவு அமைச்சகம் லிபுலேக் பகுதியை மீண்டும் உரிமை கோரியுள்ளது. 'லிபுலேக் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்' என, வலியுறுத்தி உள்ளது.நேபாளத்தின் இந்த உரிமைக்கோரலை நம் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், 'லிபுலேக் பகுதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது. இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எந்தவொரு பிரச்னையையும் பேச்சு மூலம் தீர்க்க முடியும் என்று, நாங்கள் உறுதியாக நம்புகிறோம்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Santhosh Kumar
ஆக 22, 2025 08:19

இந்தியாவின் வெளியுறவு நிலைப்பட்டை மாற்ற வேண்டும். இஸ்ரேல் போல் அதிரடி காட்டினால் மட்டுமே இந்த கத்து குட்டி நாடுகள் அடங்குவார்கள்


எவர்கிங்
ஆக 22, 2025 00:00

நேரு என்கிற போலி செய்த வினை நேபாளம்


Gnana Subramani
ஆக 21, 2025 22:25

நேபாளம் கூட சீண்டி பார்க்கிறது.


Ramesh Sargam
ஆக 21, 2025 21:46

பாக்கிஸ்தான் சீண்டுகிறது. சீனா சீண்டுகிறது. நாமும் ஏன் இந்தியாவை சீண்டி பார்க்க கூடாது என்று நேபாள் கூட நம்மை சீண்டிப்பார்க்கிறது. அவ்வளவுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை