உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிக நீண்ட நேர சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியாது

மிக நீண்ட நேர சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியாது

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று ( ஏப்., 8 ) ஏற்படுகிறது. அமாவாசையான இன்று நடக்கும் இந்த சூரிய கிரகணம் மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. 18 மாதங்களுக்கு பிறகு, பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம். இந்தியாவில் பார்க்க முடியாது. கடந்த 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகும். 5 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஏப் 08, 2024 12:46

உதயசூரியனுக்கு ம் கிரகணம் பிடித்து விட்டது. சீக்கிரம் ஒழியும்


chennaiyan
ஏப் 09, 2024 08:55

Eppadi Enna arivu


விஞ்ஞான் குமார்
ஏப் 08, 2024 11:30

ஏன் தெரியாது? இந்தியாவுல இருட்டா இருக்கும். அதான்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ