உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்; காட்டுத்தீயால் கடும் பாதிப்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்

பற்றி எரிகிறது லாஸ் ஏஞ்சல்ஸ்; காட்டுத்தீயால் கடும் பாதிப்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து நாசமான நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிகிறது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ தொடர்ந்து கபளீகரம் செய்து வருகிறது. இந்த விபத்தில், இதுவரை பத்தாயிரம் வீடுகள், கட்டடங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.80 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காட்டுத் தீ ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. சூறாவளி அளவுக்கு பலத்த காற்று வீசுவதால், காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.ஒரு பக்கம் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடும் நிலையில், மற்றொரு பக்கம் புதிதாக தீப்பிடிக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளை, தீ சூழ்ந்துள்ளதால், கரும்புகை மண்டலம் உருவாகியுள்ளது. இதுவரை, 26,000 ஏக்கர் பரப்புள்ள வனப் பகுதி, தீயில் கருகியதாக கூறப்படுகிறது. வீடுகள், கட்டடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்இதுவரை ஏழு பேர் இறந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அதேநேரத்தில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ள ஸ்டூடியோக்கள் உள்ளிட்டவையும் தீயில் நாசமடைந்தன. ஒட்டு மொத்தமாக, 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருதுக்கு உரியோரை தேர்வு செய்வதற்கான கூட்டம், லாஸ் ஏஞ்சல்சில் இந்த வாரம் நடக்க இருந்தது; இது, 19ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Karthik
ஜன 10, 2025 15:20

மேக விதைப்பு ன்னு சொல்லப் படும் செயற்கை மழை பொழிவை ஏற்படுத்தி அமெரிக்கா தீயை அணைக்க வேண்டியதுதானே? ஏன் இந்த தாமதமோ??


ஆரூர் ரங்
ஜன 10, 2025 22:11

அந்த முயற்சி செய்வதற்கு குறைந்தபட்ச அளவு மேகக் கூட்டம் இருக்க வேண்டும்


ram
ஜன 10, 2025 12:08

இண்டி கூட்டணி தலைவர்கள் எண்ணம் போல ப்யடேன், டிரம்ப் பதவி ஏற்பத்துக்குள் இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ, நியூ இயர் பொது terrorist அட்டாக், இப்போது இது


sankaranarayanan
ஜன 10, 2025 10:40

லாஸ் ஏஞ்செலில் ஏற்பட்ட தீ விபத்தினால் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட லாஸ் சொல்லிமாளாது லாசில் வெகுவாகா லாஸ் ஆகிவிட்டது


Narasimhan
ஜன 10, 2025 09:56

உலகையே அழிக்க துடிக்கும் அமெரிக்கா தானே அழிந்து போகும் நாள் வரும்


kantharvan
ஜன 10, 2025 12:01

சிம்ஹா நரசிம்மா என்ன இப்புடி சொல்லிபுடிக?? ஊரை அடிச்சு உலையில போட்டாத்தானே வயிறார உண்டு கொழிக்க முடியும்னு நெனச்சவங்க எல்லாம் வயித்துல புளியல கரைய வச்சுருக்கு இந்த தீ?? பாவத் தீ?? நீ என்றோ பற்ற வைத்த நெருப்பெல்லாம் உன்னையே பற்றியெரிய உயிர்களை கேட்கிறதோ ?? என்றே என்ன தோன்றுகிறது?? எத்தனை மக்கள் வீடு வாசல் இழந்து துயர் உறுகிறார்களோ?? பாவம். இதுபோல லெபனான், சிரியா ,ஈராக், பலஸ்தீன மக்களும் துயர் அடைந்திருப்பார்கள் என்பதை இனியாவது உணருவார்களா? அமெரிக்கர்கள் சநதேகம்தான் வாய்ப்பு இல்லை .கர்மா என்பதும் பூமராங்கா?? பூமரா??


முக்கிய வீடியோ