வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Nada Rajan
ஏப் 16, 2025 12:16
நிலநடுக்கம் அடிக்கடி வருகிறது
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (ஏப்ரல் 16) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக டில்லி உட்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் அடிக்கடி வருகிறது