உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் மக்களை வாளால் தாக்கியவர் கைது: சிறுவன் உயிரிழப்பு; போலீஸ் உட்பட சிலர் காயம்

லண்டனில் மக்களை வாளால் தாக்கியவர் கைது: சிறுவன் உயிரிழப்பு; போலீஸ் உட்பட சிலர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பொதுமக்களை வாளால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்; போலீசார் உட்பட சிலர் காயமடைந்து உள்ளனர்.லண்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாகனத்துடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் வாளால் தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியை போலீசார் மூடினர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 36 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும் கூறியுள்ளனர். இத்தாக்குதலில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்; 2 போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அங்குள்ள சுரங்கப்பாதை அடைக்கப்பட்டன. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சகுரா
ஏப் 30, 2024 23:43

காலிப்பயலுக


சாம்
ஏப் 30, 2024 17:47

மர்ம நபர் என்றாலே அமைதி தான்...


Kasimani Baskaran
ஏப் 30, 2024 17:39

மர்ம நபர் போல தெரிகிறது பிரிட்டன் அகதிகளை திரும்ப அனுப்ப முயல்வதால் வந்த பிரச்சினையா என்பது தெரியவில்லை


Bala Iyer
ஏப் 30, 2024 17:07

இந்த காலத்தில் வாள் எடுத்து வெட்டினால் என்ன சொல்வது? பெயர் போடாததால் நன்கு தெரிகிறது யார் என்று


ganapathy
ஏப் 30, 2024 16:28

அவரு பெயர் விபரம் போடமாட்டீங்க


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ