பிரிட்டன் ஜேம்ஸ் பாண்டாக நினைத்தவர் உளவு பார்த்ததாக கைது
லண்டன்:பிரபல ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரமான பிரிட்டன் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் போல் ஆக வேண்டும் என்று நினைத்தவர், ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஹோவர்ட் பிலிப்ஸ், 65, ரஷ்யாவுக்கு உளவு பார்த்து வந்தார். பிரிட்டனின் முன்னாள் ராணுவ அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் குறித்த தகவல்களை சேகரித்து அவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஏஜன்ட்களுக்கு வழங்கி வந்தார். ஆனால், அவர்கள் உண்மையில், பிரிட்டனின் உளவுப் பிரிவு அதிகாரிகள். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நடந்து வருகிறது.