உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பை 3வது முறையாக கொல்ல முயற்சி; பேரணிக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது!

டிரம்பை 3வது முறையாக கொல்ல முயற்சி; பேரணிக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்ட முதலில் இருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. முதல்முறையாக, பென்சில்வேனியாவில் கடந்த ஜூலை 13ல் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது, டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் காயம் ஏற்பட்டது. 2வது முறையாக, செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் உள்ள தன் கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, டிரம்பை குறிவைத்து துப்பாக்கியால் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். ரகசிய போலீசார் கவனித்து ஹவாயைச் சேர்ந்த ரயான் வெஸ்லே ரோத், 58, என்ற அந்த நபரை கைது செய்தனர்.இந்நிலையில், இன்று(அக்.,14) 3வது முறையாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கொல்ல முயற்சி நடந்துள்ளது. அமெரிக்கா, கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், அங்கு போலி பாஸ் மற்றும் துப்பாக்கியுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். 49 வயதான, வெம் மில்லர் என அடையாளம் காணப்பட்டார். அந்த நபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த வெம் மில்லர்?

* மில்லர் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். வலதுசாரி அரசாங்க எதிர்ப்புக் குழுவில், முக்கிய நபராக மில்லரை போலீசார் சந்தேகப்படுகின்றனர். * இதனால் மில்லர் டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல சதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். * முன்னாள் அமெரிக்க அதிபருக்கு மூன்றாவது முறையாக கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kulandai kannan
அக் 14, 2024 14:16

துப்பே இல்லாததற்கு எவன்தான் துப்பாக்கி என்று பெயர் வைத்தானோ!!


Ramesh Sargam
அக் 14, 2024 13:53

வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதுபோல அவர் அதிபராக இருந்தபோது இந்த செயலை தடுக்க எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. இன்று அவர்களாலேயே அவர் உயிருக்கு அச்சுறுத்தல்.


P. VENKATESH RAJA
அக் 14, 2024 11:00

அமெரிக்க முன்னாள் அதிபர் என்றும் பாராமல் கொலை மிரட்டல் விடுப்பது வருத்தம் அளிக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை