உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உயிர் காத்த மாமரம்

உயிர் காத்த மாமரம்

நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நேபாள வெள் ளத்தில், கூலித்தொழிலாளி ஒருவர் தப்பிய செய்தி, இணையத்தில் வேகமாக பரவியுள்ளது. பிபெக் குமால், 24, என்ற அந்த தொழிலாளி, செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது வெள்ளத்தில் சிக்கினார். பல நுாறு மீட்டர் துாரம் அவரை, வெள்ளம் இழுத்துச் சென்றது. அப்போது வழியில் தென்பட்ட ஒரு மாமரத்தை பற்றிக் கொண்டார் குமால். உயிர் பிழைக்க | கிடைத்த அந்த கடைசி வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட குமால், வெள்ளத்தின் சக்தியை தோற்கடித்தார். 'அந்த மாமரம் மட்டும் இல்லை என்றால், நான் இந்நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்' என்கிற அவரது பேட்டி, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்