உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கடல் வளங்களை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும்; சிபிஆர் வலியுறுத்தல்

 கடல் வளங்களை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும்; சிபிஆர் வலியுறுத்தல்

நமது நிருபர்

கடல் வளங்களை பாதுகாத்து, சரியான மீன்பிடிப்பு முறைகளை பின்பற்றுவதால் நாட்டின் 'நீலப் பொருளாதாரம்' வளர்ச்சி அடையும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.லட்சத்தீவின் அகத்தியில் மத்திய மீன்வளத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா தற்போது உலகின் 2வது பெரிய மீன் உற்பத்தியாளராக 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளதுடன், மீன்வளத்துறையால் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zyfpv4iv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய கடல் உணவு பொருட்கள் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி 73,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பை தடுப்பதுடன், கடல் வளங்களை எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாக்க வேண்டும். மீன்பிடி தொழிலை பாரம்பரிய தொழிலாக மட்டும் பார்க்காமல், தொழில்நுட்பம், அறிவியல், உலகளாவிய சந்தை வாய்ப்புகள் நிறைந்த நவீன தொழிலாக இளைஞர்கள் கருத வேண்டும்.மேலும், நாட்டின், பிரத்யேக மீன்வள பொருளாதார மண்டலத்தில் ஆறில் ஒரு பங்கு லட்சத் தீவிலிருந்து கிடைக்கிறது. இப்பகுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான மீன்வளத்தை பெற முடியும். இதில் 94,000 டன் டூனா மற்றும் அதிக விலை மதிப்புடைய வகை மீன்கள் உள்ளன.* நாட்டின் பிரத்யேக மீன்வள பொருளாதார மண்டலத்தில் ஆறில் ஒரு பங்கு லட்சத்தீவிலிருந்து கிடைக்கிறது.* ஆண்டுக்கு ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான மீன்வளத்தைப் பெற முடியும்.* ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புடைய டூனா வகை மீன்கள் கிடைக்கின்றன. இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rathna
செப் 01, 2026 12:45

கடல் வளம் மட்டும் அல்ல. கடந்த 60 வருட அல்லக்கைகள் ஆட்சியில் பல கிராமங்களில் உள்ள குன்றுகள், பாறைகள், சிறுமலைகளை காணவில்லை. இதில் சில ஆயிரம் கோடி ரூபாய்களை அல்லக்கைகள் ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்து வாய்க்கு அரிசி போட்டு கொண்டு உள்ளது. இதனால் வெப்பம், நீர்நிலை வறட்சி பல கிராமங்களில் நிலவுகிறது. நிலத்தடி தண்ணீர் 500 - 1000 அடிக்கு கீழ் சென்று விட்டது.


Sivagiri
செப் 01, 2026 10:16

பெரிய பெரிய கப்பல்கள் கொண்டு பிடிக்கப்படும் மீன்களெல்லாம், நம்ம மக்களுக்கு கிடையாது ... எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பியது போக கீழே சிந்தும் மீன்கள் மட்டுமே , நம்ம சாப்பிட்றதுக்கு கிடைக்கிறது ...


N Sasikumar Yadhav
ஆக 31, 2026 23:01

தமிழகத்தில் கட்சியை வளர்க்காமல் பதவியை மட்டும் வாங்கி கொண்டு சுகமாக அமர்ந்து கொண்டு தத்துவம் பேசுகிறாரு


சமீபத்திய செய்தி