உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதுக்கு பேருதான் அசுர வளர்ச்சியோ... உலகின் 4வது பெரிய பணக்காரர் ஜுக்கர்பெர்க்; முதலிடம் யார் தெரியுமா?

இதுக்கு பேருதான் அசுர வளர்ச்சியோ... உலகின் 4வது பெரிய பணக்காரர் ஜுக்கர்பெர்க்; முதலிடம் யார் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.புளும்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 200 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். இதன்மூலம், உலகின் 4வது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார். மொத்தம் 201 பில்லியன் அமெரிக்கா டாலராக அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும், ஓரக்கல் இணை நிறுவனர் லேரி எல்லிசன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,க்களான பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரை விட அதிகளவு வருவாய் ஈட்டியுள்ளார். அதாவது, 73.4 பில்லியன் சொத்துக்களை பெற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 60 சதவீத சொத்துக்கள் உயர்ந்துள்ளது. அவரது மெட்டா நிறுவன பங்குகள் வரலாறு காணாத வகையில் 560 அமெரிக்க டாலர் வரை எட்டியது. அண்மையில் நடந்த மெட்டா கனெக்ட் 2024 நிகழ்ச்சியில் பேசிய ஜூக்கர்பெர்க், ஏ.ஐ., தான் தங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்றும், இது அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் மென்பொருளாக மெட்டா ஏ.ஐ., மாறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் 272 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும்,, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 211 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்துக்களுடன் 2வது இடத்திலும், எல்.வி.எம்.எச்., தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 207 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Easwar Kamal
செப் 30, 2024 23:22

பார்த்துங்கனா அடுத்து trumpan ஆட்சிதான். facebook மற்றும் ட்விட்டர் ரெண்டும்தான் trumpuku எதிரா கொடி பிடிசீங்க. இப்போ கூகிள் மேலயும் செம கடுப்புல இருக்கிறார் நம்ம டிரம்பன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிரிகள் எவெனயும் விட்டு வைக்க மட்டன் இந்த டிரம்பன். கமலா hariis வந்த தப்பிக்கலாம்.


MURUGAN M K
செப் 30, 2024 18:49

How Brilliant, you mathematics, go to school learn clearly than made comments , always BJP comments is valid in BJP tems. be practical


Sundharji eswaran
செப் 30, 2024 18:48

அய்யா கமெண்ட் போடும் கனவான்களே, அது மில்லியன் டாலர் இல்லை. பில்லியன் டாலர். 272 பில்லியன் டாலர் என்றால் 23 லட்சம் கோடி.


என்றும் இந்தியன்
செப் 30, 2024 17:10

இதெல்லாம் ஒரு பணமா என்ன???எலன் மஸ்க் 272 மில்லியன் டாலர் = 2728.2 =ரூ 2,176 கோடி???நம்ம ஸ்டாலின் உறவினர் சபரீசனிடமே ரூ 8000 கோடி இருக்கின்றது அப்படின்னா ஸ்டாலினிடம்?? சோனியாவிடம் ரூ 91,00,000 கோடி இருக்கின்றதே???


Yaro Oruvan
செப் 30, 2024 16:24

விடியல் குடும்ப சொத்துக்கள் அவிங்களுக்கே கணக்கு தெரியாது.. பாவம் ப்ளூம்பெர்க் எப்படி கணக்கெடுக்க முடியும்


mei
செப் 30, 2024 19:24

??


Cp Subramanian
செப் 30, 2024 16:06

is the amount in Billion or Million


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 30, 2024 14:47

இதுக்கெல்லாம் என்னை ஏன் குறுகுறுன்னு பாக்குறீங்க ???? புலிகேசி மன்னர் கோபம் ......


Ramona
செப் 30, 2024 14:30

இவர்களை விட மிகபெரிய பணக்காரர்கள் நம்ம நாட்டில் இருக்கிறார்களே, அவர்கள் சொத்து மதிப்பு என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள், உலகில் நம்பர் 1 பணக்காரர் நம்ம ஊரிலேயே இருக்காங்க...


Ra ja
செப் 30, 2024 15:27

நீங்க கதறி கிட்டே இருங்க அவன் மேல போய் கிட்டே இருப்பான்


ram
செப் 30, 2024 15:46

அதுவும் தமிழ்நாட்டில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை