உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 2ம் இடத்திற்கு முன்னேறிய மார்க் ஜுக்கர்பெர்க்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 2ம் இடத்திற்கு முன்னேறிய மார்க் ஜுக்கர்பெர்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், 'மெட்டா ' நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார்.புளூம்பெர்க் நிறுவனம் உலகளவில் கோடீஸ்வரர்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.2வது இடத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., ஆன மார்க்ஜுக்கர்பெர்க் முன்னேறி உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 வது பெரிய கார்பரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்நாளில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகபடுத்தியது. இந்நாள் வரை 2வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள்4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டாலர்5வது இடத்தில் அமெரிக்காவின் லாரி எலிசன்- 179 பில்லியன் டாலர்6வது இடத்தில் அமெரிக்காவின் பில்கேட்ஸ் -163 பில்லியன் டாலர்7 வது இடத்தில் அமெரிக்காவின் லாரி பேஜ் -150 பில்லியன் டாலர்8 வது இடத்தில் அமெரிக்காவின் ஸ்டீவ் பால்மர்- 145 பில்லியன் டாலர்9வது இடத்தில் அமெரிக்காவின் வாரன் பப்பெட்- 143 பில்லியன் டாலர்10 வதுஇடத்தில் அமெரிக்காவின் செர்ஜி பிரின் -141 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
அக் 05, 2024 09:47

ஆட்சி மாற்றம் இல்லாமல் இருந்திரகுந்தால் நம் மாமன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களின் வாரிசுகள் மொத பட்டியலிலும் ஆரம்பம் முதல் முடிவு வரை இருந்திருப்பார்கள் , உலகில் வேறு யாருமே அந்த அட்டியலில் இடம்பெற்றுருக்க முடியாது, சாட்சி யு டியூப பதிவே , ஹிரண்யாய நமஹ


Mani . V
அக் 05, 2024 05:41

யோவ், இந்த சர்வேயில் கருணாநிதி குடும்பத்தை கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா, இல்லையா? அவர்கள் புருனே சுல்தானுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள். அவர்கள் குடும்பத்தை அண்டிப்பிழைக்கும் செந்தில் பாலாஜியையே 300 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார் என்றால், எங்களின் தலைவர் குடும்ப சொத்து மதிப்பிட முடியுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 04, 2024 22:22

எங்க மன்னர் குடும்பம் ????


சமீபத்திய செய்தி