உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மின்தடையால் ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளன. வழக்கத்துக்கு மாறாக ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாட்களில் இன்று திடீர் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை 3 நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களை பாதித்தது. கிட்டத்தட்ட இந்த 3 நாடுகளிலும் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்தனர். குறிப்பாக ஸ்பெயினில் மாட்ரிட், பார்சிலோனா, செவில்லே, போர்டோ, லிஸ்பன் உள்ளிட்ட தொழில் துறை மையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.மின்தடைக்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாக வில்லை. இருப்பினும் இது ஒரு சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்தடை எதிரொலியாக ரயில், விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பல்வேறு நகரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஏப் 29, 2025 07:43

நம்ம ஆற்காடு வீராசாமி சொந்தகாரங்க அங்கே அனுப்புங்கப்பா, ஏன்னா கரண்ட் டை கூட சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது திமுகவினருக்கு கை வந்த கலை.


sasikumaren
ஏப் 29, 2025 06:40

ரஷ்யாவை பகைத்து கொண்டதால் மின்சாரம் தயாரிக்க எரிபொருள் இல்லாமல் தவிக்கும் நிலையில் இந்த நாடுகள் இக்கட்டில் மாட்டிக் கொண்டன எவ்வளவு நவீன ஆயுதங்களை நாடுகள் தயாரித்தாலும் அடிப்படை வசதிகள் இல்லை என்றால் மிகவும் கடினம் தான்.


thehindu
ஏப் 28, 2025 23:36

இப்படித்தான் யாருக்கும் தெரியாமல் அணுஆயுதங்களையும் இயக்கி விடலாம் . விஞ்சான உலகின் அற்புதங்களை பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை